தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் தற்போது அமெரிக்காவின் F404-GF-IN20 என்ஜின்கள் பயன்படுத்தி வரப்படுகிறது. சில வருடங்களாகவே இந்த என்ஜின்களை தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் உரிமம் வாங்கி தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் இந்திய விமானப்படை அதனை விரும்பவில்லை. ஆகவே ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே புதிய என்ஜினை தயாரிக்க முடிவு […]
Read Moreஃபிரான்ஸ் சமீபத்தில் இந்தியாவுக்கு அதிரடி ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. சுமார் 5 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் அதாவது ஏறத்தாழ 45,000 கோடி ருபாய் மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்கள் , 100 பேந்தர் ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 ஏர்பஸ் ஏ330 பல்திறன் டேங்கர் போக்குவரத்து விமாறங்களை வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுவரையிலும் இந்தியா இதுகுறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇலகுரக தேஜாஸ் போர் விமானம் இந்தியாவின் மிக நீண்ட நாள் கனவு என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது 83 தேஜாஸ் போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை ஆர்டர் கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேஜாஸ் போர் விமானத்தில் 80% இந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதாவது தேஜாஸில உள்ள 344 அமைப்புகளில் 210 அமைப்புகள் இந்திய தயாரிப்பு ஆகும், 134 அமைப்புகள் வெளிநாட்டு தயாரிப்பு ஆகும். தற்போது வெளிநாட்டு அமைப்புகளை குறைத்து சுமார் 80% […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் பகுதியில் உள்ள கேலா மோர் எனும் பகுதி வழியாக ஜம்மு ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் உள்ள பாலம் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த நிலையில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எல்லையோர சாலைகள் அமைப்பிடம் இப்பாலத்தை சீர்செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. 60 மணி நேரத்திலேயே 110அடி நீளம் கொண்ட பாலம் நிர்மானிக்க பட்டு சோதனை ஒட்டமும் நிறைவு பெற்று போக்குவரத்து அனுமதிக்கபட்டு உள்ளது.
Read Moreஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வருகிற மார்ச் மாத இறுதிக்குள் 5 தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் எனவும், 2020-2021 நிதியாண்டு முடிவு பெறுவதற்கு முன்னர் மேலும் 2 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என்றார். மேலும் பேசுகையில் 2021-22 நிதியாண்டில் 8 தேஜாஸ் போர் விமானங்களை டெலிவரி செய்ய திட்டம் உள்ளதாகவும் கூறினார். ஆனால் சில தகவல்களின் படி தற்போது இரண்டாவது தயாரிப்பு நிலையம் இயக்கத்தில் இல்லை […]
Read Moreநைட் டெஸர்ட் என்ற பெயரில் இந்திய ஃபிரெஞ்சு விமானப்படைகள் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தற்போது ஜோத்பூர் விமானப்படை தளம் ஆயத்தமாகி வருகிறது, இந்திய விமானப்படை பயிற்சிக்கு தேவையான தளவாடங்களை ஜோத்பூர் தளத்தில் குவித்து வருகிறது. நமது விமானப்படையிற் சி17 விமானங்கள் மூலமாக தளவாடங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
Read Moreஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர் மாதவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி தகுந்த காலத்தில் டெலிவரி செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தோல்வி அடைந்தால் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். அதாவது ஒப்பந்த தொகையில் 10% ஆக அபராதம் விதிக்கப்படும் எனவும், அந்த காலத்தில் உள்ள பணவீக்கம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது எனவும் கூறினார்.
Read Moreஇந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப்படைகள் இணைந்து ஜோத்பூரில் ஐந்து நாள் மாபெரும் போர்பயிற்சியில் ஈடுபட உள்ளன.இந்த பயிற்சியில் பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் ரபேல் விமானங்கள் கலந்து கொண்டு மிகக் கடினமான மேனுவர்களை பயிற்சி செய்து பார்க்க உள்ளன.இதன் மூலம் இந்திய ரபேல் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு நல்ல அனுபவ பாடம் கிடைக்கும். டெசர்ட் நைட் 21 என இந்த பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்திய சீனப் பிரச்சனை நடந்து வரும் வேளையில் இந்த போர்பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியா தனது அனைத்து […]
Read More