பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனம் காஷ்மீர் பள்ளதாக்கு மற்றும் ஜம்மு பகுதிகளில் சுமார் 183 பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு பகுதியில் 118 பயங்கரவாதிகளும், காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் 118 பயங்கரவாதிகளும் எல்லையோரம் முகாம்களில் தயாராக உள்ளனர்.
இவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகள், பனிக்கால பாதுகாப்பு உடைகளை ஐ.எஸ்.ஐ கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லுனியா தோக், டேக்வார் ட்ரெவான், சிரிகோட் நபான், தான்டி கஸ்ஸி, பிபி நாலா, எல் பி சமானி, டேவா, டாடல், கிருஷ்ணகாட்டி, பிம்பர் காலி, நவ்ஷெரா, சுந்தர்பானி மற்றும் ஹிராநகர் பகுதிகள் இவர்களின் இலக்கு என கூறப்படுகிறது.
இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் முழு அளவில் எப்போதும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.