Breaking News

Day: January 18, 2021

காஷ்மீரில் வெடிகுண்டை கண்டுபிடித்த மோப்பநாய் !!

January 18, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடி கண்டுபிடிக்க பட்டது. நானு என்கிற ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மோப்பநாய் குப்வாரா பகுதியில் உள்ள லோன்ஹாரே சாலை ஒரத்தில் வெடிகுண்டை கண்டுபிடிக்க உதவியது. ராணுவ கான்வாய் செல்வதற்கு சற்று நேரம் முன்னர் கண்டுபிடிக்க பட்டதால் உயிர் சேதம் தவிர்க்க பட்டது.

Read More

ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கும் முயற்சியில் இந்தியா !!

January 18, 2021

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்29 மற்றும் 12 சுகோய்30 எம்.கே.ஐ போர் விமானங்களை வாங்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12 சுகோய் 30 போர் விமானங்கள் அவற்றின் ஆயுத அமைப்புகள், உதிரி பாகங்கள் மற்றும் பிற சப்ளைகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 10,730 கோடி ருபாய் ஆகும். அதை போல 21 மிக்29 அவற்றிற்கான இதர சேவைகளுடன் சேர்த்து சுமார் 7,500 கோடி ருபாய் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே பயன்படுத்தி […]

Read More

ஏப்ரலில் 114 போர் விமானங்களை படையில் சேர்க்கும் திட்டத்தை துவங்க இந்தியா முயற்சி !!

January 18, 2021

இந்த ஆண்டு ஏப்ரல் மே மாத வாக்கில் இந்திய விமானப்படையின் நீண்ட நாள் திட்டமான 114 போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்தை துவங்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் சுமார் 114 போர் விமானங்களை தயாரிக்கும் மெகா திட்டமான இது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த திட்டம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு மிக்கது என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .

Read More

விரைவுபடுத்தப்படும் ஈரான் சாபஹார் துறைமுக பணிகள் !!

January 18, 2021

ஈரானில் உள்ள சாபஹார் நகரில் இந்தியா ஒரு துறைமுகத்தை கட்டி வருகிறது, மந்தமாக நடைபெற்று வந்த இப்பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இந்தியா துறைமுகத்தில் சரக்குகளை கையாள பயன்படும் கிரென்களை சாபஹாருக்கு அனுப்பி உள்ளது.இத்தாலியில் இருந்த வாங்கப்பட்ட இந்த கிரென்கள் சாபஹார் சென்றடைந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த கருவிகளின் மொத்த மதிப்பு 8.5மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.இந்த கிரென்கள் ஒரு நாளைக்கு 15,000 டன்கள் அளவிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

2026ஆம் ஆண்டு கடற்படைக்கு இரட்டை என்ஜின் போர் விமானம் !!

January 18, 2021

TEDBF எனப்படும் இரட்டை என்ஜின் கடற்படை போர்விமானம் 2026ஆம் ஆண்டு முதல் பறக்கும் சோதனையில் ஈடுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை போர் விமானங்கள் சுமார் 26டன்கள் சுமைதிறன் கொண்டு இருக்கும்.மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள மிக்29 விமானங்களுக்கு மாற்றாக விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கும் என கூறப்படுகிறது.

Read More

பைக் ஆம்புலன்ஸ் சி.ஆர்.பி.எஃப் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பு !!

January 18, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சி.ஆர்.பி.எஃப படையுடன் இணைந்து பைக் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து உள்ளது. ரக்ஷிதா என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் காயமடைந்த வீரர்களை உடனடியாக மீட்க உதவும். வாகனங்கள் செல்ல முடியாத சாலை வசதிகளற்ற காட்டு பகுதியில் இந்த பைக் ஆம்புலன்ஸ் பேருதவி ஆக அமையும்.

Read More