Day: January 16, 2021

இந்திய ராணுவ அதிகாரி உருவாக்கி உள்ள நவீன ட்ரோன் !!

January 16, 2021

இந்திய தரைப்படையின் EME படைப்பிரிவை சேர்ந்த அதிகாரி லெஃப்டினன்ட் கர்னல் ஜி.ஒய்.கே. ரெட்டி ஆவார்.இவர் சமீபத்தில் தான் கண்டுபிடித்த மைக்ரோகாப்டர் ட்ரோனை தில்லியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் அறிமுகம் செய்தார். இந்த ட்ரோன் கட்டிடங்களுக்குள் சென்று பணய கைதிகள், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடிக்க வல்லது. மேலும் சுமார் இரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. இந்த ட்ரோன் ஏற்கனவே காஷ்மீரில் பாரா சிறப்பு படைகளால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தரைப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

அஸ்திரா ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைப்பு !!

January 16, 2021

அஸ்திரா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும், இது விமானப்படையில் இணைக்கப்பட்டதாக இந்திய விமானப்படை அறிவித்து உள்ளது. அஸ்திரா ஏவுகணை பல்வேறு உயரங்களில் எவ்வித தட்பவெப்ப நிலையிலும் குறைந்தபட்சம் 20கிமீ தொலைவு மற்றும் அதிகபட்சமாக 80-110கிமீ தொலைவுகளிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது. இந்த ஏவுகணைகள் நமது சுகோய்30, மிராஜ்2000, மிக்29 மற்றும் தேஜாஸ் ஆகியவற்றில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை பாக் மற்றும் சீன விமானப்படைகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் என்பதில் […]

Read More

முதல் முறையாக ஸ்வார்ம் ட்ரோன் தொழில்நுட்பத்தை வெளிகாட்டிய இந்தியா !!

January 16, 2021

நேற்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற இந்திய தரைப்படை தின விழாவில் மிக முக்கியமான தொழில்நுட்பம் ஒன்று வெளி காட்டப்பட்டது. ஸ்வார்ம் ட்ரோன் அதாவது ட்ரோன் கூட்டம் தொழில்நுட்பம் போர்முறையை மாற்றி வரும் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு தாய் ட்ரோன் பல சிறிய “குழந்தை” ட்ரோன்களை களமிறக்கி விட்டு இயக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ட்ரோன்களை வைத்து நிகழ்த்தி காட்டப்ட்ட இந்த தொழில்நுட்பம் நேற்று சுமார் 75 ட்ரோன்களை கொண்டு நிகழ்த்தி காட்டப்பட்டது. வருங்காலத்தில் ஒரே நேரத்தில் […]

Read More

இந்திய வானூர்திகளை ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது: தேஜாஸின் தந்தை !!

January 16, 2021

தேஜாஸ் இலகுரக போர் விமான திட்டத்தின் தந்தை என அறியபடுபவர் முனைவர் கோட்டா ஹரிநாரயணா ஆவார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தேஜாஸ் திட்டத்தில் பெற்று கொண்ட அனுபவங்கள் பற்றி பேசினார். அவர் கூறுகையில் நான் முனைவர் பட்டம் பெற படித்து கொண்டு இருக்கும் போது தான் தேஜாஸ் போர் விமானத்தை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இன்று தேஜாஸ் இந்திய விமானப்படையிலும் இணைந்து தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. தேஜாஸ் போர் விமானம் அதன் பிறப்பை ஒப்பிடுகையில் […]

Read More

S-400 ஒப்பந்தம் நிறைவு பெற்றால் இந்தியா மீது நடவடிக்கை உறுதி !!

January 16, 2021

ரஷ்யாவுடனான S-400 ஒப்பந்தம் நிறைவு பெற்றால் உறுதியாக இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் S-400 ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சில நாட்களில் பதவியேற்க உள்ள பைடன் நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக அதி தீவிரமாக செயல்படும் என கூறப்படுகிறது. மேலும் க்ரைமியாவை ரஷ்யா எடுத்துக்கொண்ட பிறகு அமெரிக்கா இயற்றிய சட்டம் ரஷ்யா மீதும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் […]

Read More

மறைவில் இருந்து சுடுபவரை கண்டுபிடிக்கும் கருவி அசத்தும் இந்திய ராணுவ அதிகாரி !!

January 16, 2021

மேஜர் அனூப் மிஷ்ரா இந்திய தரைப்படையின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரி.இவர் புனேயில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரி உதவியுடனும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடனும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி மூலமாக சுமார் 400மீட்டர் தொலைவில் மறைந்து இருந்து சுடும் நபரை அவரது தோட்டா வரும் பாதையை வைத்தே கண்டுபிடிக்க கூடிய கருவியை வடிவமைத்து உள்ளார்.இந்த கருவிக்கு “பார்த்” என பெயர் இடப்பட்டு உள்ளது. இத்தகைய கருவி இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். […]

Read More