Day: January 11, 2021

அத்துமீறி நுழைந்த 6 பாகிஸ்தான் இளைஞர்கள் பாக். இடம் மீண்டும் ஒப்படைப்பு !!

January 11, 2021

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பஞ்சாப் மாநில எல்லை வழியாக ஊடுருவ முயன்றனர். அப்போது அவர்களை நமது எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து சோதனையிட்டு விசாரித்தனர். பின்னர் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகளோ பொருட்களோ இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் பாக் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Read More

50%க்கும் அதிகமான இந்திய ராணுவ வீரர்கள் தீவிர மன உளைச்சலால் பாதிப்பு !!

January 11, 2021

யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய பாதுகாப்பு படையினரின் நலன்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். இந்த அமைப்பு சார்பில் கர்னல் ஏ.கே. மோர் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்திய ராணுவ வீரர்களில் 50% க்கும் அதிகமானோர் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக பயங்கரவாத எதிர்ப்பு போரில் பங்கெடுப்பது, குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது, பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவை […]

Read More

ரஸ்டம்-1 ஆயுதம் தாங்கிய ட்ரோன் தயார் !!

January 11, 2021

ரஸ்டம்-1 ட்ரோனுடைய ஆயுதம் தாங்கிய ரகத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ADE அமைப்பின் விஞ்ஞானிகள் ஏவுகணை பொருத்தப்பட்ட ரஸ்டம்-1 ட்ரோன் வடிவமைத்து உள்ளனர். விரைவில் இதன் சோதனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன.

Read More

காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு !!

January 11, 2021

காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் சந்தாரா கிராமத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் பற்றிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து 50ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், 110ஆவது மத்திய ரிசர்வ் காவல்படை பட்டாலியன் ஆகியவை செயலில் இறங்கின. அப்போது 10×5×5 அடிகள் அளவு கொண்ட பதுங்குமிடம் கண்டுபிடிக்க பட்டது. இதன் மேற்புறத்தில் ஒரு மூடி இருந்தது பின்னர் ஆறடி தூரத்துக்கு ஒரு சுரங்கமும் இருந்தது. அங்கிருந்து லஷ்கர் இ தொய்பா தொடர்பான பொருட்கள் ஏகே47 தோட்டாக்கள் ஆகியவை […]

Read More

சியாச்சின், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் படையினருக்கு நவீன பொருட்கள் !!

January 11, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவு டிபாஸ் ஆகும். இந்த அமைப்பு சியாச்சின் வீரர்களுக்காக அலோக்கல் க்ரீம் என்ற க்ரீமை தயாரித்து உள்ளது. இந்த க்ரீம் பனியின் காரணமாக ஏற்படும் ஃப்ராஸ்ட் பைட், சில ப்ளேய்ன்ஸ் உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவும். நவீன தண்ணீர் பாட்டில்- இதன் உள்ளே அடைத்து வைக்கப்படும் தண்ணீரானது -50 டிகிரி குளிரிலும் உறையாது. சோலார் பனி உருக்கும் இயந்திரம்- சூரிய சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் ஒரு […]

Read More

சீன தடுப்பூசிகள் வேண்டாம், இந்தியாவுக்கு ஆர்டர் கொடுத்த மியான்மர் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

January 11, 2021

சீன தடுப்பூசி மருந்துகளை வேண்டாம் என கூறிவிட்டு மியான்மர் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்திய தடுப்பூசி வாங்க ஒப்பந்தம். மியான்மர் 3 கோடி தடுப்பூசிகளை வாங்க ஃபெப்ரவரி மாத முடிவில் பெற இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதை போல் ஃபிலிப்பைன்ஸ் அரசும் இந்தியாவின் செரம் இன்ஸ்டிடியூட் இடமிருந்து சுமார் 3 கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ககன்யான் திட்டம்: 2 இந்திய விமானப்படை மருத்துவர்கள் பயிற்சி பெற ரஷ்யா பயணம் !!

January 11, 2021

இந்திய விமானப்படையின் 2 மருத்துவர்கள் விண்வெளி மருத்துவத்தில் பயிற்சி பெற ரஷ்யா பயணமாக உள்ளனர். அடுத்த கட்டமாக ஃபிரான்ஸ் சென்று அங்கும் பயிற்சி பெற உள்ளனர் என்பது கூடுதல் தகவல். இந்த இருவரும் ஏரோஸ்பேஸ் (Aerospace) மருத்துவ நிபுணர்கள் ஆவர், விண்வெளி செல்லும் வீரர்களின் உடல்நிலையை புறப்படுவதற்கு முன்பும் பின்பும் மீண்டும் பூமிக்கு வந்த பின்னரும் சோதிக்க வேண்டியது இவர்கள் பணி ஆகும்.

Read More

லடாக்கில் சீன ராணுவ வீரர் கைது !!

January 11, 2021

லடாக்கின் சுஷூல் செக்டாரில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய வீரர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணைக்கு பின்னர் அவரை சீன ராணுவத்திடம் ஒப்படைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இப்படி பிடிபட்ட சீன வீரர் விசாரணைக்கு பின்னர் சீன படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More