ஃபிரெஞ்சு அரசு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க உள்ளதாகவும், இந்தியாவுக்கு எதிரான சீனாவின் பொய் குற்றச்சாட்டுகளை ஏற்க போவதில்லை எனவும் அறிவித்து உள்ளது. மேலும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடு பற்றி கவலை தெரிவித்த ஃபிரான்ஸ் ஹோர்மூஸ் வளைகுடா பகுதியில் ஐரோப்பிய கடல்சார் விழிப்புணர்வு திட்டத்தில் இணையுமாறும், ஜிபூட்டி மற்றும் ஆஃப்ரிக்க முனையில் உள்ள ஃபிரெஞ்சு கடற்படை தளங்களை இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், இந்தோ பசிஃபிக் மற்றும் […]
Read Moreஃபிரான்ஸ் அரசாங்க வட்டாரத்தில் இருந்து வெளியாகும் செய்திகளின் படி துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு இனி இல்லை என கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தானுடைய மிராஜ்2000 மற்றும் அகோஸ்டா ரக நீர்மூழ்கி கப்பல்களை தரம் உயர்த்த அல்லது அவற்றிற்கான தளவாடங்களை விற்பதில்லை எனவும், மேலும் துருக்கியுடனும் இதே நிலைபாட்டை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் ஃபிரான்ஸில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Read Moreஃபிரான்ஸ் ரஃபேல் விமானங்களில் 70% தயாரிப்பு அமைப்பை இந்தியாவில் நிர்மானிக்க விரும்புவதாகவும் பேந்தர் ரக ஹெலிகாப்டர்களின் 100 % தயாரிப்பு அமைப்பையும் இந்தியாவில் நிர்மானிக்க விரும்புகிறது. மேலும் 6 ஏர்பஸ்330 பலதிறன் போக்குவரத்து மற்றும் டேங்கர் விமானங்களை குத்தகை அடிப்படையில் இந்திய விமானப்படைக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இது தவிர மஹாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் சுமார் 9,900 மெகாவாட் அணுசக்தி நிலையத்தை அமைப்பது குறித்தும் இந்தியா வந்துள்ள ஃபிரெஞ்சு அரசின் ஆலோசகர் இம்மானுவேல் போன் பேச்சுவார்த்தை […]
Read Moreஇந்தியா வந்துள்ள ஃபிரான்ஸ் அரசின் ஆலோசகர் இம்மானுவேல் போன் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அப்போது ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் M88 Engine ரக என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும், இலகுரக போர் விமானம் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகியவற்றிற்கான இரட்டை என்ஜின்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் ஃபிரான்ஸ் விரும்புவதாக குறிப்பிட்டார்.
Read Moreதனியார் கப்பல் ஒன்று சமீபத்தில் சீனாவால் பிடிக்கப்பட்டது, இக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 23 பேர் பணியாற்றி வந்தனர். கப்பலுடன் 23 மாலுமிகளும் சீனாவில் சிக்கி கொண்டனர், பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளால் கப்பல் விடுவிக்கப்ட்டது. தற்போது ஜப்பான் செல்லும் இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி இந்தியா வந்து சேரும் என மத்திய அமைச்சர் மன்சூக் மான்டவியா தெரிவித்தார்.
Read Moreஇத்தாலி ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பாகிஸ்தானுடைய தூதராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் அகா ஹிலாலி. சமீபத்தில் பாக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலகோட் தாக்குதல் பற்றிய விவாதத்தில் பேசிய அவர் இந்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் என்றும், பாகிஸ்தான் விமானப்படை அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Read Moreஈரான் நாட்டின் டார்ஹின் மாகாணத்தில் உள்ள அல் பாப் எனும் பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைந்து உள்ளன. இந்த எண்ணெய் கிணறுகள் மீது மர்மமான முறையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. அதன் காரணமாக எண்ணெய் கிணறுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
Read More