Day: January 5, 2021

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் மிக்21 விபத்து !!

January 5, 2021

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்கர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை போர்விமானம் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில் சிக்கிய விமானம் மிக் 21 பைசன் ரகம் எனவும், விமானி உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாக இந்திய விமானப்படை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Read More

ஆயுத ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசால் புதிய கமிட்டி அமைப்பு !!

January 5, 2021

இந்தியா ஆயுத இறக்குமதியை குறைக்கும் வகையில் பல்வேறு ஆயுத தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. அதை போல இந்திய தளவாடங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவர். இந்த கமிட்டி ஏற்றுமதிக்கான அனுமதி வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

எந்தநேரத்திலும் செயல்பட தயாராக இருங்கள்-சீனப்படைகளுக்கு ஷின்பிங் உத்தரவு

January 5, 2021

முழு அளவில் எதற்கும் தயாராகவும், எந்த நொடியிலும் செயல்பட தயாராக இருக்குமாறும் சீனத் தலைவர் க்சி சின்பிங் தனது இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். உண்மையான போருக்கு ஏற்றவாறு உண்மையான போர் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு ஷின்பிங் உத்தரவிட்டுள்ளார்.எந்த நேரத்திலும் செயல்படும் அளவில் எப்போதும் தயாராக இருக்குமாறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 2021ல் தனது படைகளுக்கு முதல் கட்டளையாக இதனை பிறப்பித்துள்ளார்.இது தவிர ஸ்புங்குர் கேப் மற்றும் பங்கோங் ஏரி பகுதிகளில் சீனா அதிக அளவிலான படைகளை தற்போது குவித்துள்ளதாக தகவல்கள் […]

Read More

அக்னி 5 ஏவுகணையை விரைவில் படையில் இணைக்க உள்ள இந்தியா !!

January 5, 2021

5000கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையான அக்னி5ஐ விரைவில் படையில் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முழு அளவிலான தயாரிப்பு பணிகளை எட்டியுள்ள இந்த ஏவுகணை அடுத்த சில மாதங்களில் படையில் இணைக்கப்பட உள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ஒட்டுமொத்த ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பாவில் பாதியை தாக்கும் ஆற்றல் கொண்டது என்பது கூடுதல் தகவல். மேலும் எல்லையில் சீனாவின் அடாவடித்தனம் இந்த ஏவுகணையை படையில் விரைந்த இணைக்க […]

Read More

இரண்டாவது டைப்075 நிலநீர் தாக்குதல் ஹெலிகாப்டரை சோதனை செய்யும் சீனா !!

January 5, 2021

கடந்த ஏப்ரல் மாதம் சீனா இரண்டாவது டைப்075 கப்பலை கட்டி முடித்தது, தற்போது அதன் கடல் சோதனைகளை துவங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த கப்பலை சீனாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான ஹூதோங்-ஜாங்குவா கட்டியுள்ளது, இந்நிறுவனம் உலகிலேயே இரண்டாவது பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் வாஸ்ப் ரக நிலநீர் போர்முறை கப்பல்களுக்கு இணையானவை என குறிப்பிடப்படுகிறது. டாங்கிகள், கவச வாகனங்கள், மரைன் வீரர்கள், ஹெலிகாப்டர்கள் […]

Read More

ஐ.நா பாதுகாப்பு சபையில் தனது பதவிக்காலத்தை துவங்கிய இந்தியா !!

January 5, 2021

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது அதில் ஆசியாவில் இருந்து போட்டி இன்றி இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று இந்தியா தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கியது, இந்தியாவுடன் நார்வே, கென்யா, அயர்லாந்து மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தங்களது பதவிக்காலத்தை துவங்குகின்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பெற தீவிர முயற்சி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Read More

அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்து 9 பேர் கைது !!

January 5, 2021

நேற்று மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவ முயன்ற 9 பேர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் இவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரவி என்பவன் உதவியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க பட்டனர்.

Read More