Day: January 3, 2021

இந்திய கடற்படைக்கு 8ஆவது களமிறக்கும் கப்பலை டெலிவரி செய்த GRSE !!

January 3, 2021

கல்கத்தாவில் உள்ள GARDEN REACH SHIPBUILDERS & ENGINEERS Ltd பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனம் இந்திய கடற்படைக்கு 8ஆவது களமிறக்கும் கப்பலை நேற்று டெலிவரி செய்தது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரியர் அட்மிரல் வி கே சக்ஸேனா ” GRSE நிறுவனம் எட்டாவதும் கடைசியுமான களமிறக்கும் கப்பலை இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளதாகவும், மேலும் இந்த கப்பல்கள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் பகுதியில் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார். […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் காயம் !!

January 3, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ட்ரால் பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நேற்று கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் மற்றும் 7 பொதுமக்கள் காயமடைந்தனர், இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தேடி வருகின்றனர்.

Read More

அருணாச்சல பிரதேசத்தில் கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தீடிர் விசிட் !!

January 3, 2021

தற்போது இந்திய சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது, இந்த சூழலில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் எல்லையோர தளங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். சீன எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் திபாங் பள்ளதாக்கு மற்றும் லோஹித் செக்டார்களில் ஆயுவு மேற்கொண்ட அவர், அங்கு பணியில் உள்ள தரைப்படை, ITBP மற்றும் SFF வீரர்களை சந்தித்து பேசி உற்சாகமுட்டினார். மேலும் அவர் எல்லையோர விமானப்படை தளங்களையும் ஆய்வு செய்தார்.

Read More

இந்த வருடம் குடியரசு தினத்தில் பங்கேற்கும் வங்கதேச ராணுவம் !!

January 3, 2021

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் தேதி தலைநகர் தில்லியில் பிரமாண்ட குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் பல்வேறு ராணுவ படை பிரிவுகள், கலாச்சார வாகனங்கள் பங்கேற்பது வழக்கம், மேலும் கடந்த சில வருடங்களாக சில வெளிநாட்டு படைகளும் அணிவகுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நமது அண்டை நாடான வங்கதேசத்தின் தரைப்படை அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. அவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் “பிடி-08” ரக துப்பாக்கியுடன் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சீன நீர்மூழ்கிகளை கண்காணிக்க ஒன்றினையும் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா !!

January 3, 2021

பல ஆண்டுகளாக சீன கடற்படை நீர்மூழ்கி கலன்கள் தென்சீன கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தொந்தரவாக இருக்கிறது. இந்த நிலையில் சீன நீர்மூழ்கிகளை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள உள்ளன. அந்த வகையில் SOSUS – Sound Surveillance Sensors Chain எனும் சோனார் வகையறா அமைப்பினை தென்சீன கடல் முதல் இந்திய பெருங்கடல் வரை கட்டமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அணுசக்தி சார்ந்த இடங்களின் தகவல்களை இந்த ஆண்டும் பரிமாறி கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் !!

January 3, 2021

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழக்கம் போல இந்த ஆண்டும் நேற்றைய தினம் இரு நாடுகளில் உள்ள அணுசக்தி சார்ந்த இடங்களின் தகவல்களை பரிமாறி கொண்டன. கடந்த 1988 ஆம் ஆண்டு கையெழுத்து ஆன ஒப்பந்தத்தின்படி இந்த தகவல்கள் பரிமாறப்படுகிறது, கடந்த 1992 முதல் இது ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்களின் வாயிலாக முறையே இரவு 11:30 மற்றும் 11:00 மணிக்கு இந்த பரிமாற்றம் நடைபெற்றது.

Read More

காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி கைது-ஆயுதங்கள் பறிமுதல்

January 3, 2021

காஷ்மீரின் குல்கமில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.மேலும் அந்த பயங்கரவாதியிடமிருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குல்கமில் ஹட்டிபூரா என்னும் பகுதியில் ஆபரேஷன் ஹாட்டிபூரா என்ற பெயரில் ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் காவல் துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து ஒரு சீன கைத்துப்பாக்கி, ஒரு சீன கிரேனேடு இரண்டு AK மேகசின்கள், ஒரு ஜெர்மன் தயாரிப்பு காம்பஸ் ஆகியவை […]

Read More