Day: January 2, 2021

2021இல் இந்தியாவின் தாக்கும் சக்தியை அதிகரிக்க உள்ள ஐந்து ஏவுகணைகள் குறித்த பார்வை

January 2, 2021

2020இல் இந்தியா, டிஆர்டிஓ மேம்படுத்திய பல்வேறு ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து பார்த்தது. மேலும் DRDO பல்வேறு ஏவுகனைகளை தற்போது மேம்படுத்தி வருகிறது. அதைபோல் 2021லும் இந்தியா DRDO மேம்படுத்தி வரும் புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது. 1)பிரம்மோஸ் ER பிளாக் 4 இந்தியா ஏற்கனவே 290 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை 400கிலோமீட்டர் வரை தாக்கும் அளவுக்கு தூரத்தை அதிகரித்துள்ளது. அதை மேலும் 800 கிலோ மீட்டராக அதிகரிக்க தற்போது பிரம்மோஸ் ER […]

Read More

போர் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ள பிரான்சின் ரபேல் விமானங்கள்

January 2, 2021

இந்திய சீன எல்லையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரஃபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதம் ஜோத்பூரில் போர் பயிற்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. ஸ்கைரோஸ் வார்கேம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள ஜோத்பூருக்கு பிரான்ஸ் நாட்டு ரஃபேல் விமானங்கள் வந்துள்ளன. இந்த விமானங்களோடு இந்திய ரஃபேல் விமானங்களும் சுகாய் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளன. இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் கலந்து […]

Read More

முக்கிய ரகசியங்களை திருட பாக் புது திட்டம்- எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை !!

January 2, 2021

பாகிஸ்தான் உளவுத்துறை முக்கிய இந்திய ரகசியங்களை அறிந்து கொள்ள புதிய திட்டம் தீட்டி உள்ளது என நமது உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி முக்கிய இந்திய உயர் அதிகாரிகள் போன்று பாக் உளவாளிகள் பாதுகாப்பு படை கட்டுபாட்டு அலுவலகங்களை தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை பெற்று கொள்ள திட்டம் தீட்டி உள்ளனர். ஆகவே அனைத்து அழைப்பாளர்களின் முழு அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே பேச வேண்டும் என பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Read More

இந்திய கடற்படைக்கு புதிய லேசர் கருவிகளை விற்கும் பெல் நிறுவனம் !!

January 2, 2021

பெல் நிறுவனம் வெற்றிகரமாக இந்தியாவிலேயே முழுவதும் தயாரான லேசர் டேஸ்லர் கருவிகளை இந்திய கடற்படைக்கு வழங்க உள்ளது. இவை தாக்குவதற்கு உபயோகப்படாது ஆனால் இதிலிருந்து வரும் லேசர் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்படும் பகுதியில் உள்ள நபர்களின் பார்வை திறன்களை தற்காலிகமாக பாதிக்கும், அதாவது அதிக வெளிச்சத்தை பார்த்தால் என்ன நடக்குமோ அந்த விளைவு ஏற்படும். இதன்மூலம் அத்துமீறி நுழையும் கப்பல்கள், படகுகள், ட்ரோன்கள் ஆகியவற்றை நிறுத்தி முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

2021ஆம் வருடத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டிய 8 முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஒரு பார்வை !!

January 2, 2021

இந்தியாவின் மேற்கு அண்டை நாடு மற்றும் குறிப்பாக கிழக்கு அண்டை நாடு ராணுவ பலத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி நவீனமயமாக்கலில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவும் அதற்கு சமமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் 2021ஆம் வருடம் இந்தியா கீழ்க்கண்ட 8 ஒப்பந்தங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம். 1) LCH – இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர். HAL தயாரிப்பான இந்த தளவாடம் 15ஐ வாங்க அரசு அனுமதி அளித்த போதிலும் இதுவரை ஒப்பந்தம் […]

Read More

புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க விஞ்ஞானிகள உழைக்க வேண்டும் – டி ஆர் டி ஒ தலைவர் !!

January 2, 2021

வெள்ளிக்கிழமை அன்று டி ஆர் டி ஒ தனது 60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது அதனை அடுத்து அன்று டி ஆர் டி ஒ தலைவர் பேசிய காணொளியில் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும், விண்வெளி, சைபர் பாதுகாப்பு சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க உழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் […]

Read More

தரைப்படை மற்றும் கடற்படைக்கு புதிய தளவாடங்களை வடிவமைத்து பரிசோதனை செய்த டி ஆர் டி ஒ !!

January 2, 2021

இந்திய தரைப்படையின் தேவைக்கு ஏற்ப டாங்கிகள், லாரிகளின் போக்குவரத்திற்காக மூன்று புதிய வகை இயந்திரவிசை பாலங்களை டி ஆர் டி ஒ உருவாக்கி உள்ளது. இந்த பாலங்கள் சுமார் 70 டன் வரை தாங்கும் திறன் கொண்டவையாக 5மீட்டர், 10மீட்டர் மற்றும் 15 மீட்டர் என மூன்று வகைகளாக உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்திய கடற்படைக்கென SAHAYAK-NG என்ற அடுத்த தலைமுறை கண்டெய்னரையும் உருவாக்கி உள்ளது. இந்த கண்டெய்னர்களில் மூலமாக முக்கிய கருவிகள் மற்றும் பிற சப்ளை […]

Read More

போர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் ட்ரோன்கள் வாங்க அனுமதி

January 2, 2021

போர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் ட்ரோன்கள் வாங்க அனுமதிஇந்திய பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னனி போர் கப்பலில் இருந்து இயக்குவதற்காக 10 ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை பெற முயற்சித்து வந்தது இந்திய கடற்படை.தற்போது இந்த ட்ரோன்களை பெற அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியையும் அதன் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு 10 கப்பலில் இருந்து இயக்கப்படக்கூடிய ட்ரோன்களை வாங்க இந்திய அரசாங்கம் ஒப்புதலைப் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 10 ஆளில்லா கண்காணிப்பு […]

Read More

பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

January 2, 2021

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். நேற்று ரஜோரி மாவட்டத்தில் நௌஸ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் இராணுவம் சிறிய மோட்டார்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் அத்துமீறி இந்திய நிலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நாய்ப் சுபேதார் ரவீந்தர் அவர்கள் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த வீரர் ரவீந்தரை மருத்துவமனைக்கு […]

Read More