உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை கொண்டு எதிர்கால போரை வெல்வோம்-தளபதி ராவத்

  • Tamil Defense
  • December 18, 2020
  • Comments Off on உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை கொண்டு எதிர்கால போரை வெல்வோம்-தளபதி ராவத்

உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை கொண்டு எதிர்கால போர்களை வெல்வோம் என ஒருங்கிணைந்த படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களும் ஊக்கம் பெற்றுள்ளன எனவும் அவர்கள் நமது ஆதரவை எதிர்பார்த்துள்ளனர் எனவும் தளபதி கூறியுள்ளார்.

டிஆர்டிஓ அறிவியலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில் பேசிய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைப்பதாகவும் அதற்கு அறிவியலாளர்கள் முக்கிய பங்காற்றலாம் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், டிஆர்டிஓ பாதுகாப்பு படைகளுக்கு அதிநவீன ஆயுதங்களை மேம்படுத்தி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் போரில் பரிணாமம் மாறும் எனவும் அதற்கேற்றது போல் நாமும் பரிணமிப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார்.