டிசம்பர் 25 அன்று, ஜம்முவில் கத்துவா மாவட்டத்தின் மச்செடி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இராணுவ கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மற்றொரு இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இடிந்து விழுந்த கட்டமைப்பிற்கு அருகே மூன்று ராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த வீரர் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனை பதான்கோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்,என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.