1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா

  • Tamil Defense
  • December 16, 2020
  • Comments Off on 1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா

1950 அக்டோபர் 14ல் மகாராஸ்டீராலின் புனேயில் பிறந்தது  அந்த வீரம். இந்த குழந்தை இந்தியாவின் நிகரற்ற வீரமாக மலரும் என அவர் தந்தை நினைத்ததில் வியப்பில்லை.ஏனெனில் அவரது குடும்பம் தங்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தயங்கியதில்லை.

அவரது பெரும் தாத்தா 1848ல் பிரிட்டாஷருக்கு எதிராக சீக் இராணுவத்தில் இணைந்து போரிட்டவர்.அவரது தாத்தா முதலாம் உலகப்போரில் வீரராக பணியாற்றியவர் மற்றும் அவரது அப்பா பிரைகேடியர் M.L. கேடர்பால் கார்ப்ஸ் ஆப் என்ஜினியரிங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

லாரன்ஸ் பள்ளியில் தனது முதல் படிப்புகளை முடித்து 1967ல் என்டிஏ வில் இணைந்தார்.பின்பு மூன்று வருடத்திற்கு பிறகு இந்தியன் மிலிட்டரி அகாடமியில் இணைந்து இராணுவப் பயிற்சிகளை முடித்து 17வது பூனா ஹார்ஸ் படை பிரிவில் இணைந்து ( 13 June 1971) விரிந்த கனவுகளுடன் தேசத்திற்கு சேவையாற்ற தயாரானார்.

அப்போது தான் 1971 போர் தொடங்கியது.17வது பூனா ஹார்ஸ் பிரிவு 47வது இன்பான்ட்ரி பிரைகேடுடன் இணைக்கப்பட்டு  பசந்தர் போரில்  ஷாகர்கர் செக்டாரில் போரிட அனுப்பப்பட்டடது.

Battle of Basantar

47வது இன்பான்ட்ரி பிரேகேடுக்கு வழங்கப்பட்ட முக்கியமான கட்டளைகளில் பசந்தர் ஆற்றில் கைப்பற்றுவது. 15டிசம்பர் அன்று கட்டளையை நிறைவேற்றியது 47வது பிரைகேடு. ஆனால் அங்கு தான் பிரச்சனை.எதிரிபடைகள் அந்த பகுதி முழுவதிலும் கண்ணிவெடிகளை பதித்திருந்தனர்.இதனால் 17வது பூனா ஹார்சில் (அது ஒரு டாங்கி பிரிவு என்பதை புரிந்து கொள்ளவும்) இருந்த கவச வாகனங்களை அங்கு  கொண்டு சென்று நிலைநிறுத்துவது கடினமானது.இன்பான்ட்ரி வீரர்களுக்கு கண்டிப்பாக கவச வாகன ஒத்துழைப்பு தேவை.ஒரீடத்தை கைப்பற்றினால் அங்கு நாம் முதலில் பலம் பெற்று தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்தால் தான் மேற்கொண்டு முன்னேற முடியும். எனவே பூனா ஹார்சில் இருந்த கவச வாகனங்களில் தேவையை உணர்ந்து இருந்த கண்ணி வெடிகளை அகற்ற என்ஜினியர் குழு வரவழைக்கப்பட்டு கண்ணிகள் வெடிகளை அகற்றும் பணி தொடங்கியது.பாதி பணிகள் நடைபெறும் போது ஆற்றில் இருந்த படைகள் எதிரிகள் வேகமாக முன்னோக்கி வருவதை உணர்ந்து எச்சரிக்கை செய்து உடனடியாக கவச வாகன சப்போர்ட்டை கோரினர். ஒருபுறம் ஆற்றில் முனையில் வீரர்கள் .நடுவே கண்ணிகள்.இந்தப்புறம் பூனா ஹார்ஸ் படை பிரிவு.இந்த கண்ணிவெடிகளுக்குள் சென்றார் பூனா ஹார்சுக்கு பலத்த அடி தான் விழும்.

Bridge-head

16 டிசம்பர் அன்று பாக் படைகள் கவச வாகனங்கள் முதல் எதிர் தாக்குதலை பூனா ஹார்ஸ் படைகள் மீது ஜார்பால் என்ற இடத்தில் தொடுத்தனர். 8 மணிக்கு அமெரக்க தயாரிப்பான பேட்டன் டேங்குகளை கொண்ட பாக்கிஸ்தானின் 13வது லான்சர் படைப் பிரிவு பூனா ஹார்சின் “பி” ஸ்குவாட்ரான் மீது தாக்குதலை தொடங்கினர். “பி” ஸ்குவாட்ரான் தலைவர் மேலதிக படைகள் தேவை என தகவல் அனுப்பினார்.நமது ஹீரோ அருண் அவர்கள் “ஏ” ஸ்குவாட்ரானில் இருந்தார்.தனது கவச வாகன படைகளுடன் “பி” ஸ்குவாட்ரானுக்கு உதவ விரைந்தார்.டாங்க் போர் துவங்கியது.

முதல் எதிர்த்தாக்குதல்  நமது வீரர்களால் மிகத் தெளிவாக தொடுக்கப்பட்டது. டாங்குகள் குண்டு மழை பொழிந்தன.எதிரி வீரர்களும் மிகத் திறமையாக போரிட்டனர்.இரு பக்கமும் தனது போர் திறமையால் ஒருவரை ஒருவர் வீழ்த்த முயன்றனர்.அருண் அவர்கள் தனது டாங்குடன் பாக் டாங்கில் குறுக்கே பாய்ந்து அதை வீழ்த்தினார்.

அடுத்து முன்னோக்கி சென்று கொண்டிருந்த பாக் டாங்குகளை விரட்டி பாய்ந்தார்.அவரின் டாங்க் பிரிவில் இருந்த ஒரு டாங்கின் கமாண்டர் வீரமரணம் அடைந்தார்.தோல்வியும் கண்டாலும் தளரவில்லை.தளர்வது தான் தோல்வியின் படி என அவர் நினைத்திருந்தார்.மீண்டும் தனியாக சென்று இரண்டு பாக் டாங்குகளை வீழ்த்தினார்.

எவ்வளவு தான் பாக் டாங்குகளை சிதறடித்தாலும் மீண்டும் சேர்ந்து தாக்குதலை தொடுத்தனர். அருண் அவர்களும் அவரது இரண்டு டாங்குகளும் போரிட்டு 10 பாக் டாங்குகளை வீழ்த்தினர். துரதிஷ்டவசமாக அவர் அந்த சண்டையில் வீரமரணம் அடைந்தார்.

கடைசியாக அவரது டாங்க் எதிரியின் துப்பாக்கியால் தாக்கப்படும் போது எதிரியின் டாங்கை சிதறடித்தார்.அவரது வீரத்தால் இந்திய டாங்குகளும் படைகளும் அந்த இடத்தில் வலுப்பெற்றனர்.

அவரது டாங்க் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகும் தருணத்தில் ரேடியோ கரகரத்தது.அவரது உயரதிகாரி அவரிடம் பேசினார். “உனது டாங்கை விட்டு வெளியேறி திரும்பு என்றார்”.அப்போது அந்த டாங்க் தீப்பற்றி எரிந்து நகல முடியாமல் நின்றிருந்தது. “இல்லை சார்.என்னால் எனது டாங்கை கைவிட முடியாது.எனது டாங்கின் முதன்மை துப்பாக்கி இன்னும் வேலை செய்கிறது.இந்த வேசிகளை (bastard – முறை தவறி பிறந்தவரகள் ) நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று தனது கடைசி வார்த்தகளை உதிர்த்தார். மீண்டும் எதிரி டாங்குகளை சுட தயாரானார்.அவர் சுட்ட கடைசி பாக் டாங்க் அவர் டாங்கில் இருந்து 100மி தொலைவில் இருந்தது.அந்த நேரத்தில் அவரது டேங்கை இரண்டாவது குணடு தாக்கி அவர் படுகாயம் அடைந்திருந்தார். டாங்கில் இரத்த வெள்ளத்தில் மிதந்து வீரமரணம் அடைந்த அவரையும் அவரது டாங்க்  “Famagusta” யும் பாக் கைப்பற்றி திரும்ப இந்தியாவிடம் அளித்தது.அந்த டாங்க் இன்றும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது வீரதீர சாகசம் காரணமாக அவருக்கு இந்தியா பரம் வீர் சக்ரா அளித்து பெருமை கொண்டது இந்தியா.

17டிசம்பர் அருகே சம்பா மாவட்டம் அருகே அவரது உடல் எரியூட்டப்பட்டு ,சாம்பல் அவரது வீட்டாருக்கு அனுப்பப்பட்டது.

அவரது டேங்கான ஃபமகஸ்தாவில் அவருடன் சோவர் பிரயக் சிங்( ஓட்டுநர்) சோவர் நந்த் சிங் (ரேடியோ ஆபரேட்டர் )சோவர் நாது சிங் (கன்னர் ) மற்றும் அவர்களுக்கெல்லாம் கமாண்டர் அருண் கேடர்பால் அவர்கள் இருந்தனர்.போரில் முதலில் வீரமரணம் அடைந்தது சோவர் நந்த் சிங் அவர்கள்.அருண் அவர்கள் வீரமரணம் அடைந்த பின் பிரயக் சிங் மற்றும் நாது சிங் அவர்கள் பாக் படைகளால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் பின்பு கேப்டனாக பதவி உயர்வு பெற்று பின்பு ஓய்வு பெற்றனர்.