இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான்

  • Tamil Defense
  • December 14, 2020
  • Comments Off on இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான்

விமானப்படையின் சிறந்த அதே சமயம் மிகத் திறமை வாய்ந்த வீரர் தான் நிர்மல்ஜித் அவர்கள்.இளைஞர்களை விமானப் படையில் இணைய உந்துசக்தியாக விளங்கும் அவரது வீரம்செறிந்த வரலாற்றை காணலாம்.

டிசம்பர் 16, 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்திய தீர்க்கமான பெரிய வெற்றியை இந்தியா சுவைத்தது.வெற்றி எனும்போது கொண்டாட்ட மனநிலைக்கு செல்லும் நாம் அதற்காக நாம் இழந்த வீரர்களை மறந்து விடுகிறோம்.பல வீரர்களின் தன்னலமற்ற வீரத்தால் நாம் வெற்றியை பெற்றொம்.

48 வருடங்கள் கடந்துவிட்டது.நாம் நமது வீரர்களின் தியாகத்தை நினைத்து பார்ப்போம்.அந்த வகையில் இன்று தன் வீரதீரத்தால் எதிரிகளை விரட்டிய ஒரு மாவீரரின் வரலாற்றை காணலாம்.

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தின் ஐசிவால் தாகா என்ற கிராமத்தில் ஜீலை 17,1943ல் பிறந்தார் நிர்மல்ஜித் அவர்கள்.அவரது அப்பா டர்லோசன் சிங் செகான் இந்திய விமானப்படையில் பிளைட் லெப்டினன்டாக பணிபுரிந்துள்ளார்.

அவரது அப்பாவை தனது ஹீரோவாக நினைத்த நிர்மல்ஜித் தன் சிறுவயதிலேயே தான் ஒரு விமானப்படை வீரர் தான் என்ற கனவை நெஞ்சில் நிறுத்தினார்.
கனவோடு நில்லாமல் தனது பள்ளிபடிப்பிற்கு பிறகு தனது கனவை நனவாக்கினார்.ஜீன் 4,1967ல் பைலட் அதிகாரியாக விமானப்படையில் இணைந்தார்.

நான்கே வருடத்தில் ,அதாவது 1971ல் வங்கதேச விடுதலைப் போர் தொடங்கியது.அம்ரிஸ்டர் ,பதான்கோட் மற்றும் ஸ்ரீநகர் விமானப்படை தளங்கள் மீது பாக் விமானப்படை தொடர்சியான தாக்குதலை தொடங்கின.விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரனை சேர்ந்த விமானங்கள் ஸ்ரீநகரின் வான் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தன.

தங்களது சிறந்தபறக்கும் திறன் காரணமாக பிளையிங் புல்லட் ,அதாவது பறக்கும் குண்டுகள் எனப்பட்ட இந்த ஸ்குவாட்ரானில் தான் நிர்மல்ஜித் அவர்கள் இடம்பெற்றிருந்தார்.

டிசம்பர் 14,1971ல் அவர்  Stand-By 2 duty ( ஆர்டர் கிடைத்தால் இரண்டே நிமிடத்தில் வானில் பறக்க வேண்டும்) டியூட்டியில் இருந்தார்.அவருடன் டியூட்டியில் இருந்த மற்றொரு வீரர் பிளைட் லெப்டினன்ட் பல்தீர் சிங் குமன் அவர்கள்.

‘G-Man’ தனது சகாக்களிடையே அறியப்பட்ட பல்தீர் அவர்கள் தான்  நிர்மல்ஜித் அவர்களின் சீனியர், பறத்தல் பயிற்றுவியலாளர் மற்றும் நாட் போர்விமானத்தின் மீது நிர்மல் அவர்களுக்கு காதல் ஏற்பட காரணமானவர்.நாட் விமானம் 1965 போரில் மிகச் சிறப்பறாக செயல்பட்டு சேபர் ஸ்லேயர் அதாவது பாகிஸ்தானின் சேபர் விமானங்களை அதிக அளவு வீழ்த்தி சேபர் வெட்டுபவன் என்ற பெயரை பெற்றிருந்தது.

நிர்மல் அவர்களை அவரது  சகாக்கள்  “பிரதர்” என்ற தான் அழைப்பர்.அவர் அனைவரும் நெருங்கி பழகக்கூடிய மனிதராக இருந்தார்.

அதிகாலை வேலை பாகிஸ்தானின் ஆறு  F-86 சேபர் விமானங்கள் பெசாவர் தளத்தில் இருந்து கிளம்பி ஸ்ரீநகர் தளத்தை தாக்க வந்தன.இந்த குழு பாக்கின் விங் கமாண்டர் சங்காசி தலைமையில் பிளைட் லெப்டினன்ட் டோடானி,அன்ராபி,மிர்,பைக் மற்றும் யுசுப்சாய் ஆகிய வீரர்களுடன் ஸ்ரீநகரை தாக்க வந்தன.குளிரின் பனிமூட்டத்தை சாதகமாக கொண்டு இந்திய எல்லையைக் கடந்து யாரும் காணா வண்ணம் ஸ்ரீநகரை நெருங்கின.

அந்த காலத்தில் ரேடார் எல்லாம் எல்லை.தளங்களுக்கு முன்நிலைகளில் உள்ள பெரிய மலைப் பகுதியில் கண்காணிப்பு கோபுங்கள் அமைத்து அதில் வீரர்கள் தான் கண்காணிப்பில் ஈடுபடுவர்.இவ்வாறு உள்நுழையும் விமானங்கள் கண்காணித்து தலைமையகத்திற்கு தகவல் கூறுவர்.அதே போல சேபர்கள் எல்லைக்குள் நுழைந்ததை ஸ்ரீநகரில் இருந்து சில கிமீ தொலைவில் இருந்த கண்காணிப்பு நிலையில் இருந்த வீரர்கள் கண்டு தளத்திற்கு உடனடியாக எச்சரிக்கை செய்தியை அனுப்பினர்.

உடனடியாக  ‘G-Man’ பல்தீர் மற்றும்  ‘Brother’ செகான் அவர்கள் இருவரும் தங்களது நாட் விமானத்தை நோக்கி ஓடி ஹேங்கரை விட்டு விமானத்தை வெளியே எடுத்து  Air Traffic Control (ATC) அமைப்பிடம் மேலெழும்ப அனுமதி கேட்டனர்.இவை அனைத்தும் கனநேரத்தில் நடந்தது.ஆனால் ரேடியோ அலைவரிசையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நேரம் தாமதம் ஆனது.அதன் பிறகு சிறிதும் யோசிக்காமல் விமனாத்தை மேலெப்பிய வேளையில் பாக் விமானங்கள் ஓடுதளத்தில்  குண்டுகளை பொழிந்தது.

நிர்மல் அவர்கள் மேலெம்பிய தருணம் அவரை தாண்டி இரு சேபர் விமானங்கள் செல்வதை கண்டார்.அதிவேகத்தின் தனது விமானத்தை திருப்பி அடுத்த தாக்குதலுக்கு திரும்பிய சேபர் விமானங்களை துரத்த தொடங்கினார்.இந்திய விமானப்படை வரலாற்றில் பெரிய ” dogfight” எனப்படும் சண்டை தொடங்கியது.

நாட் விமானம் பறப்பதை உணர்ந்த பாக் விங் கமாண்டர் சங்காசி வெளி எரிபொருள் டேங்கை விமானத்தை விட்டு வெளியேற்றி விமானத்தை கீழ் நோக்கி செலுத்த கட்டளையிட்டார்.டோடானி விமானத்தின் பின்புறம் நிர்மல்ஜித் விரட்டி சென்று தனது முன்புற விமான துப்பாக்கி கொண்டு சுட்டார்.அந்த காலத்தில் முன்புற துப்பாக்கிளுடன் மட்டுமே விமானச் சண்டை நடைபெற்றது.ஏனெனில் வான் ஏவுகணைகள் அப்போது இல்லை.
டோடானி மிக கடினமான நிர்மல் அவர்களை சமாளித்து அடிபடாமல் தப்பித்தார்.அதே நேரம் இரு சேபர் விமானங்கள் நிர்மல் அவர்களின் விமானத்தை துரத்தின.தற்போது ஒரு நாட் விமானத்தை நான்கு சேபர்கள் விரட்டின.அதே நேரம் பல்தீர் அவர்கள் மேலெழும்பிய பிறகு நிர்மல் அவர்களின் விமானத்தை பார்க்கமுடியவில்லை.ஏனெனில் மூடிபனி காரணமாக பார்ப்பது சிரமமாக இருந்தது.

நிர்மல் அவர்கள் தன் இயந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அவரது வீரம் காரணமாக நான்கு சேபர்களை எதிர்க்க துணிந்தார்.சேபர்கள் அவரது விமானத்தின் மீது குண்டுகளை பொழிந்தது.அவற்றை மிகத் திறமையாக தவிர்த்தார்.மீண்டும் தாக்க தொடங்கிய நிர்மல் இரு  பாக் சேபர் விமானங்களை சுட்டு வீழ்த்தினார்.

இதன் பிறகு நிர்மல் அவர்களின் நாட் விமானத்தை பின்தொடர்ந்து வந்த பாக் சேபர் விமானத்தின் பிளைட் லெப்டினன்ட் மிர்சா தனது விமானத்தின் ஆறு இயந்திர துப்பாக்கிகள் உதவியுடன் நாட் விமானத்தை சுட்டார்.இதில் அவர் விமானம் அடிபட்டது.இந்த நேரத்தில் தான் பல்தீர் அவர்களுக்கு தனது கடைசி செய்தியை அனுப்பினார்.

“I think I’m hit. G-Man, come and get them!”

( நான் அடிபட்டுவிட்டேன் என நினைக்கிறேன்.G-Man வந்து அவர்களை வீழ்த்துங்கள்)

விமானத்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேற அடிபட்ட நாட் விமானம் ஸ்ரீநகர் தளத்தை நோக்கி திரும்பியது.ஆனால் 37 குண்டுகள் அவரது விமானத்தை தாக்கியதால் அவரது பறத்தல் கட்டுப்படுத்தி அமைப்புகள் சேதமடைந்திருந்தது.நாட் விமானம் கவிழ்ந்து திரும்பி வீழ தொடங்கியது.நிர்மல் அவர்கள் தன் விமானத்தில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.ஆனால் வெளியேறும் அமைப்பும் சேதமடைந்திருந்தது.

காஷ்மீரின் பட்கம் அருகே விமானம் விழுந்தது.அவர் வீரமரணம் அடைந்தார்.அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே.

தன்னலமற்ற வீரம், நிகரற்ற உட்சபட்ச தியாகம் காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.விமானப்படை வீரர் பரம்வீர் சக்ரா பெறுவது அதுவே முதல்முறை.

விமானப்படையில் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றிகொண்டிருந்த அவரது அப்பா மற்றும் அவரது மனைவி விருதை பெற்றுகொண்டனர்.

இந்திய இராணுவச் செய்திகள்