சிக்கிம் சாலை விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

  • Tamil Defense
  • December 21, 2020
  • Comments Off on சிக்கிம் சாலை விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மூன்று இராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் சிக்கிமில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இராணுவ கலோனலின் 13வயது மகனும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.இந்திய-சீன எல்லை அருகே உள்ள நாதுலா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த சாலை பனி மிகுந்ததாகவும் இராணுவ வாகனங்கள் பயணிக்கும் இடமாகவும் உள்ளது.இங்கு தான் பள்ளத்தில் இராணுவ வாகனம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரு வீரர் மற்றும் மீட்கப்பட்டு தற்போது கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டுள்ளார்.