சோபியான் என்கௌன்டர் இராணுவ வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • December 28, 2020
  • Comments Off on சோபியான் என்கௌன்டர் இராணுவ வீரர் வீரமரணம்

சோபியான் என்கௌன்டரின் போது படுகாயமடைந்த இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இந்த என்கௌன்டர் கடந்த வெள்ளியன்று தொடங்கி சனி காலை முடிவு பெற்றது.இதில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

இந்த சண்டையில் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.இதில் ஒரு வீரர் படுகாயடைந்தார்.

காயமடைந்த வீரர்கள் இருவரும் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஒவைஸ் பாருக் மற்றும் அசீப் லோன் எனப்படும் இருவரும் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.