
ஐந்தாவது முயற்சியாக இந்திய கடற்படை 10 கப்பலில் வைத்து இயக்க கூடிய கண்காணிப்பு ஆளில்லா ட்ரோன்களை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லடாக் பிரச்சனையை முன்னிட்டு அவசரமாக பாதுகாப்பு படைகள் தளவாடங்களை தருவித்து படைகளில் இணைத்து வருகின்றன.
இந்திய பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னனி போர்க்கப்பல்களில் இருந்து இயக்குவதற்காக பத்து ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை பெற இந்திய கடற்படை முயற்சித்து வருகிறது.
ஏற்கனவே இந்திய கடற்படை இதுபோன்ற ட்ரோன்களை பெற முயற்சித்து சில ட்ரோன்களை சோதனையும் செய்தது.சீனா தற்போது தான் இதுபோன்ற ட்ரோன் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.ஏஆர்500சி எனும் ட்ரோனை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு பணிகளுக்காக இந்திய கடற்படை தற்போது காமோவ்-31 வானூர்திகளை பயன்படுத்தி வருகிறது.இந்த ஆளில்லா ட்ரோன்களும் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.