
டிசம்பர் 15 அன்று இந்திய கடலோர காவல் படை சமர்த் ரக கடலோர ரோந்து கப்பலை படையில் இணைத்துள்ளது.மொத்தமாக 11 கப்பல்கள் ஆர்டர் செய்யப்பட்டு இவற்றை இரண்டு தொகுதியாக படையில் இணைக்கப்பட்டு வந்தது.
இந்த கப்பலை கோவா கப்பல் கட்டும் தளம் வடிவமைத்து கட்டியுள்ளது.இந்த கப்பலுக்கு ஐசிஜிஎஸ் சக்சம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முதல் தொகுதியான ஃபிளைட் 1-ன் ஆறு கப்பல்களும் மே 2012ல் ஆர்டர் செய்யப்பட்டு டிசம்பர் 2017ல் முடிவுற்றது.பிளைட் 2ன் ஐந்து கப்பல்கள் கடந்த ஆகஸ்டு 2016ல் ஆர்டர் செய்யப்பட்டது.
இந்த கப்பல்கள் மணிக்கு 43கிமீ வேகம் செல்லக்கூடியது.22கிமீ வேகத்தில் 11000கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.இதில் இரு இரட்டை என்ஜின் வானூர்திகள் நிறுத்த முடியும்.மேலும் இதில் ஐந்து அதிவேக ரோந்து படகுகளும் இணைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஒரு 30மிமி சிஆர்என் 91 நேவல் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.தவிர மேடக் 30மிமீ தானியங்கி துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.இரு12.7மிமீ கனரக இயந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.இதை இயக்க 18 அதிகாரிகளும் 108 மாலுமிகளும் தேவைப்படுவர்.