
இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள Quick Reaction Surface to Air Missile (QRSAM) உபயோகிப்பாளர் சோதனையை அடுத்த ஆறு மாதத்திற்குள் முடித்து அடுத்த வருடம் தொடர் தயாரிப்புக்கு தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா மேம்படுத்தியுள்ள முதல் நகரும் தன்மையுள்ள வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு தான் இந்த QRSAM ஆகும்.இராணுவத்தின் ஸ்ட்ரைக் கார்ப்ஸ் பிரிவுக்காக டிஆர்டிஓ இந்த அமைப்பை மேம்படுத்தியுள்ளது.மேம்பாடு தொடர்பான அனைத்து சோதனைகளும் தற்போது முடிவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த ஆறே மாதத்தில் இராணுவத்திற்காக சோதனைகளும் அடுத்த வருடத்தில் தொடர் தயாரிப்பிற்கும் இது உள்படுத்தப்படும்.
10கிமீ உயரத்தில் வரும் இலக்குகளை 30கிமீ வரை சென்று தாக்க கூடியது.இது 90%இந்திய தயாரிப்பு ஆகும்.
இந்த அமைப்பின் ரேடார் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம்கள் அனைத்தும் நமது பெல் நிறுவனம் தயாரித்துள்ளது.ஏவு அமைப்பை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனும் ஏவுகணையை பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும்.