இந்தியா தாக்கும் என்ற பயத்தில் பாக் இராணுவம்

இந்திய இராணுவம் மீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் பாக் இராணுவம் உட்சபட்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தினமும் எல்லையில் சண்டை நடைபெற்று வருவதாலும் பாக் இராணுவத்தின் பயம் அதிகரித்துள்ளது.

புதன் இரவு முதலே இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன.கடும் சண்டையாக நடைபெற்று வருகிறது.இந்த சண்டையில் பாக் பக்கம் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாக்கின் விஐபி விமானங்கள் தொடர்ந்து பறந்ததை நமது குழு கண்காணித்தோம்.செஸ்னா,எம்பரேயர் மற்றும் கல்ப்ஸ்ட்ரீம் ஆகிய விமானங்கள் முக்கிய அதிகாரிகளை தலைநகருக்கு அழைத்து சென்றதை காண முடிந்தது.

அதே போல தனது அவாக்ஸ் விமானம்ன சாப் 2000 விமானத்தையும் எல்லை அருகே இயக்கியது.