பாகிஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் அதிகளவு தயாரிக்கப்பட்டு வரும் சீனாவின் JF-17 விமானத்தை அதிகளவு படையில் இணைக்க உள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கம்ராவில், பாகிஸ்தானின் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 14 ஜேஎப்-17 விமானங்கள் தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களை பாகிஸ்தான் விமான படையில் இணைக்க உள்ளது.
இரட்டை இருக்கை கொண்ட விமானங்களை பாகிஸ்தான் வரும் புதன்கிழமை படையில் இணைக்க உள்ளது.
Jf-17 ஒரு நான்காம் தலைமுறை விமானமாகும். இந்த விமானத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2007 இல் சீனா முதல் முறையாக இந்த JF-17ன் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படைக்கு அளித்தது. அன்று முதல் பாகிஸ்தான் JF-17 விமானங்களை தனது படையில் இணைத்து வருகிறது.
2017 நவம்பர் மாதத்தில் இந்த பழைய விமானங்களை புதுப்பிக்க சீனா பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஜேஎப்-17 விமானங்கள் பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பு என்ஜினையே பயன்படுத்தி வருகின்றது. எனவே பாகிஸ்தான் எஞ்சின் காக ரஷ்யாவிடம் எதிர்பார்த்து நிற்க வேண்டிய ஒரு நிலை உள்ளது. இந்தியா ரஃபேல் விமானங்களை படையில் இணைத்த பிறகு JF-17 விமானங்களைத்தான் பாகிஸ்தான் நம்பியுள்ளது.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு f16 விமானங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியதை அடுத்து தற்போது JF-17 விமானம்தான் பாகிஸ்தானின் விமானப்படையில் முக்கிய தாக்கும் விமானம் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.