நீலகிரி ரக பிரைகேட் கப்பலான ஐஎன்எஸ் ஹிம்கிரியை லாஞ்ச் செய்த கப்பல் கட்டும் தளம்

புரோஜெக்ட் 17ஏ அல்லது நீலகிரி ரக பிரைகேட் கப்பல்களின் வரிசையில் இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் ஹிம்கிரி கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கடலில் ஏவியுள்ளது.சிவாலிக் ரக பிரைகேட் கப்பல்களுக்கு பிறகு இந்த அதிநவீன ஸ்டீல்த் பிரைகேட் கப்பல்களை கடற்படைக்காக கார்டன் ரீச் தளம் கட்டி வருகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய மலைப் பகுதிகளின் பெயர்கள் இந்த ஏழு கப்பல்களுக்கும் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு முன் பிரிட்டிஷாரின் லியான்டர் ரக கப்பல்கள் நீலகிரி கப்பல்கள் என பெயர் மாற்றப்பட்டு இந்திய கடற்படையில் செயல்பட்டு வந்தன.அவை தற்போது படையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அதே வரிசையில் தற்போது கட்டப்பட்டு வரும் போர்க்கப்பல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.ஏழு கப்பல்கள் முறையே ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி,ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் துணகிரி, ஐஎன்எஸ் தரகிரி,ஐஎன்எஸ் விந்தியகிரி மற்றும் ஐஎன்எஸ் மகேந்திரகிரி என பெயரிடப்பட்டுள்ளன.

மொத்தமாக ஏழு கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.அதில் நான்கு கப்பல்கள் மசகான் கப்பல் கட்டும் தளத்திலும் மற்ற மூன்று கப்பல்கள் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்திலும் கட்டப்பட்டு வருகிறது.

கப்பலில் பாரக் 8 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாதுகாப்பு மற்றும் தாக்கும் சக்தியாக இணைக்கப்படும்.