அடுத்த மாதம் இந்திய விமான படையில் இணைய இருக்கும் மேலும் மூன்று ரஃபேல் விமானம்

  • Tamil Defense
  • December 28, 2020
  • Comments Off on அடுத்த மாதம் இந்திய விமான படையில் இணைய இருக்கும் மேலும் மூன்று ரஃபேல் விமானம்

மேலும் மூன்று ரஃபேல் பலபணி போர் விமானங்கள் அடுத்த மாதம் இந்திய வர இருக்கிறது. இந்தியா வாங்க இருந்த 36 விமானங்களில் தற்போது 3ம் தொகுதியாக மூன்று விமானங்கள் அடுத்த மாதம் இந்திய வர இருக்கிறது. எந்த தேதியில் இந்த மூன்று விமானங்கள் வரும் என்ற தகவல் இல்லை, ஆனால் அடுத்த மாதம் கட்டாயமாக மூன்று விமானங்களும் இந்திய வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பிரான்ஸ்சில் இருந்து நேரடியாக ஜாம் நகர் விமான தளத்தில் தரையிரங்கும்.

கடந்த ஜூலை 28ம் தேதி முதல் தொகுதியாக ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்திய வந்தது. இந்த விமானங்கள் அம்பலா விமானபடை தளத்தில் வைத்து படையில் இணைக்கப்பட்டது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சு பாதுகாப்புதுறை அமைச்சர் புஃளேரன்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த படைத்தளபதி மற்றும் விமானபடைத் தளபதி கலந்து கொண்டனர்.

இந்த ரஃபேல் விமானங்களை பிரான்ஸின் டஸ்சால்ட் ஏவியேசன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்திய இந்நிறுவனத்திடம் 36 விமானங்களை சுமார் 59 ஆயிரம் கோடி செலவில் வாங்கி உள்ளது. அடுத்த வருடம் அதாவது 2021ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும்.

தற்போது இந்திய விமான படையில் ரஃபேல்,சுகாய்,எல்சிஏ தேஜாஸ், மிராஜ் 2000 மற்றும் மிக் ரகவிமானங்கள் உள்ளன. இதை தவிர அப்பாச்சி,சின்னுக் ஆகிய வானூர்திகளும், C130J மற்றும் C17 குளோப் மாஸ்டர் போக்குவரத்து விமானங்களும் உள்ளன.