இஸ்ரேலிய ட்ரோன் எதிர்ப்பு கருவியை ஆர்டர் செய்துள்ள கடற்படை

  • Tamil Defense
  • December 9, 2020
  • Comments Off on இஸ்ரேலிய ட்ரோன் எதிர்ப்பு கருவியை ஆர்டர் செய்துள்ள கடற்படை

இஸ்ரேலிய தயாரிப்பு ஸ்மாஷ்-2000 பிளஸ் ஃபயர் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சைட் அமைப்பை கடற்படை ஆர்டர் செய்துள்ளது.இந்த பார்க்கும் அமைப்பை துப்பாக்கியின் மேல் பொருத்த முடியும்.இந்த அமைப்பின் மூலம் சிறிய ரக ட்ரோன்கள் மூலமாக ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க முடியும்.இதை இரவு மற்றும் பகல் பொழுதுகளில் பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மாஸ்-2000 பார்க்கும் கருவியை அடுத்த வருடம் முதல் இஸ்ரேல் டெலிவரி செய்யும்.பத்து லட்சத்துக்கும் குறைவான விலையுடன் இந்த அமைப்புகள் வருகின்றன.இந்த அமைப்பின் மூலம் வேகமாக நகரும் சிறிய ட்ரோன்களை கண்காணித்து சுட்டு வீழ்த்த முடியும்.120மீ வரை தாக்கும் சக்தி கொண்டது.

இந்த பார்க்கும் கருவியை தயாரிக்கும் ஸ்மார்ட் சூட்டர் நிறுவனத்துடன் ஒரு இந்திய நிறுவனம் இணைந்து இந்த கருவிகளை தயாரித்து வழங்கும்.சிறிய ரக ட்ரோன்கள் இராணுவத்திற்கு தற்போது சவாலாக அமைந்து வருகின்றன.