
இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளில் கடற்படைகள் இரண்டு நாட்களாக தென்சீனக் கடற்பரப்பில் கடல் போர் பயிற்சி நடத்தியுள்ளனர். இந்த போர் பயிற்சி தற்போது முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கடற் சார்ந்த இராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்றது.
பாஸ்ஸெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி கடந்த 26ம் தேதி தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போர் பயிற்சி தற்போது நிறைவடைந்தது. இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்படவும் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தன்மையை வலுப்படுத்தவும் இந்த பயிற்சி நடைபெற்றது.
கடந்த 25ம் தேதி வியட்நாமில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சாகர் 3 என்னும் திட்டத்தின் கீழ் 15டன் உதவி பொருட்களுடன் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கில்தன் போர் கப்பல் வியட்நாமின் ஹோசிமின் நகரம் சென்றது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உறவுகளை மேம்படுத்துவது வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சாகர் 3 என்னும் திட்டத்தின் கீழ் 15 டன் உணவு பொருட்கள் மற்றும் உதவி பொருட்களை வியட்நாம்விற்கு அனுப்பி வைத்தது.