MRSAM ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை

டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள நடுத்தூரம் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணையின் இராணுவ வகை இன்று சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.அதிவேகாக பயணித்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்தது.

இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் ஐஏஐ நிறுவனங்கள் இணைந்து இந்த MRSAM இராணுவ வகை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை மேம்படுத்தியுள்ளது.இதில் ஒரு கட்டளை நிலையம்,பலபணி ரேடார் மற்றும் ஒரு நகரும் திறன் கொண்ட ஏவுகணை ஏவு அமைப்பு இருக்கும்.

இலக்கை வெற்றிகரமாக தாக்கி சோதனை வெற்றியடைந்ததற்கு தனது வாழ்த்துக்களை பாதுகாப்பு துறை அமைச்சர் பதிவு செய்துள்ளார்.