ஆர்டில்லரி பிரைகேடு பெறும் 17வது மலையக தாக்கும் பிரிவு

  • Tamil Defense
  • December 12, 2020
  • Comments Off on ஆர்டில்லரி பிரைகேடு பெறும் 17வது மலையக தாக்கும் பிரிவு

கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுக்கும் நமக்கும் தொடர்ந்து மோதல் நடைபெற்று வரும் வேளையில் மேற்கு வங்கத்தின் பனகாரில் உள்ள சீனாவுக்கென்றே உருவாக்கப்பட்ட மலையக தாக்கும் பிரிவு அதற்கென தனியான ஆர்டில்லரி பிரைகேடை பெற உள்ளது.

ஏற்கனவே புது ஆர்டில்லரி பிரைகேடை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அதில் மற்ற ஆர்டில்லரிகளுடன் இலகு ரக ஹொவிட்சர்களும் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

90000 வீரர்களுடன் 64000 கோடி செலவில் ஒரு முழு மலையக ஸ்ட்ரைக் கார்ப்ஸ் படை பிரிவு உருவாக்க திட்டமிட்டப்பட்டு பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக பணி தாமதம் ஆனது.தற்போது சீனப்பிரச்சனை நடைபெறும் வேளையில் மலையக தாக்கும் பிரிவின் தேவை உணரப்பட்டுள்ளது.

தற்போது மலையக தாக்கும் பிரிவில் ஒரு டிவிசன் மட்டுமே உள்ளது.பாக்கிற்கென பதான்கோட்டை மையமாக வைத்து மற்றொரு டிவிசன் உருவாக்க திட்டமிட்டப்பட்டு முன்னேற்றம் இல்லாமல் தற்போது உள்ளது.