
27000 கோடிகள் செலவில் உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து ஆயுதம் இறக்குமதி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் 27000 கோடிகள் அளவிலான ஆயுதங்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்காக டிஆர்டிஓ தயாரிப்பு அவாக்ஸ் ரேடார் ,கடற்படைக்காக அடுத்த தலைமுறை கடலோர ரோந்து கப்பல்கள் மற்றும் இராணுவத்திற்கான மோடுலார் பாலங்கள் ஆகியைவை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.ஏற்கனவே 101 தளவாடங்களை வெளிநாடுகளின் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.