JVPC துப்பாக்கி சோதனை நிறைவு : டிஆர்டிஓ

டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள 5.56×30 மிமீ கார்பைன் துப்பாக்கி தனது இறுதி கட்ட சோதனையை டிசம்பர் 7,2020 அன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.

கோடை காலம் மற்றும் குளிர்காலங்களில் சோதனை செய்யப்பட்டு சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் இந்த துப்பாக்கி விரைவில் படையில் இணைய உள்ளது.

மூன்று கிகி எடையுடைய இந்த கார்பைன் துப்பாக்கி 100மீ வரை சுடக்கூடியது.வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் உபயோகிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கியை கான்பூரில் உள்ள சிறிய ரக துப்பாக்கி தயாரிப்பு தொழில்சாலை தயாரிக்கும்.இதற்கான தோட்டக்களை புனேவில் உள்ள அம்யூனிசன் தயாரிப்பு தொழில்சாலை தயாரிக்கும்.