
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உட்சபட்ச கவனத்துடன் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு யாரும் எங்களை ஆச்சரியத்திற்கிடமான வகையில் தாக்க முடியாது.நாட்டை காக்க உறுதிகொண்டுள்ளோம் மற்றும் எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம் மற்றும் உட்சபட்ச தயார் நிலையில் உள்ளோம் என கூறியுள்ளனர்.
எங்கள் வீரர்கள் லடாக் செக்டாரில் மிகச் சிறப்பாக சண்டையிட்டனர்.லடாக்கில் உள்ள ஐடிபிபி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.அதே போல இங்குள்ள வீரர்களும் சிறப்பாக செயல்பட நேரம் எதிர்பார்த்து காத்துள்ளதாக ஐடிபிபி படையின் 55வது பட்டாலியன் கமாண்டர் கூறியுள்ளார்.