
இந்திய-சீன எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை புதிதாக 10000 வீரர்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது.புதிய ஏழு பட்டாலியன்கள் மூலம் சுமார் 10000 வீரர்கள் படையில் இணைக்கப்பட உள்ளனர்.
யூனியன் உள்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி ஏற்கனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய-திபத் எல்லையை காக்கும் பொருப்பு இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படையினுடையது ஆகும்.3488கிமீ பரந்த எல்லையை தற்போது காவல் காத்து வருகின்றனர்.
சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து எல்லையை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.லடாக்கின் சந்தாங் பகுதியில் புதிதாக சீனப் படையினர் ஊடுருவ முயற்சித்துள்ளனர்.அங்கு ஊடுருவ முயற்சித்த சீனர்களை அங்குள்ள மக்கள் விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.