கடற்சோதனைகளுக்கு பிறகு படையில் இணைய உள்ள ஐஎன்எஸ் விசாகப்பட்டிணம்
1 min read

கடற்சோதனைகளுக்கு பிறகு படையில் இணைய உள்ள ஐஎன்எஸ் விசாகப்பட்டிணம்

முதல் விசாகப்பட்டிணம் ரக டெஸ்ட்ராயர் போர்க்கப்பல் தற்போது பேசின் சோதனைகளை முடித்துள்ளது.இதற்கு பிறகான கடற்சோதனைகளுக்கு பிறகு 2021ன் முற்பகுதியில் இந்த போர்க்கப்பல் படையில் இணைய உள்ளது.

கொல்கத்தா ரக போர்க்கப்பல்களை போலவே விசாகப்பட்டிணம் ரக கப்பல்களும் கட்டப்பட்டுள்ள எனினும் அதை விட நவீனமாக கட்டப்பட்டுள்ளது.ஃபிளஷ் டெக்,மற்றும் இன்பிராரெட் குறைப்பு அமைப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

76மிமீ ஓட்டோமெலாரா துப்பாக்கிக்கு பதிலாக 127மிமீ மெயின் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.ரேடார் கண்ணில் அகப்படுவதை குறைக்கும் அளவுக்கு மாஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போர்க்கப்பலில் 32 நெடுந்தூர பாரக்8 வான் பாதுகாப்பு ஏவுகணைகள்,16 பிரம்மோஸ் ஏவுகணைகள்,4 ஏகே-600 அமைப்பு,4 கனஎடை டொர்பிடோ ஏவு அமைப்பு மற்றும் ஆர்யுபி-600 நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.