சாப்ட்வேர் அப்டேட் பெறும் இந்திய ரபேல் விமானங்கள்

  • Tamil Defense
  • December 18, 2020
  • Comments Off on சாப்ட்வேர் அப்டேட் பெறும் இந்திய ரபேல் விமானங்கள்

சீனா பாக் என இருமுனை அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டு வரும் வேளையில் இந்தியாவின் ரபேல் விமானங்கள் சாப்ட்வேர் அப்டேட் பெற உள்ளன.ரபேலின் ஸ்கல்ப் ஏவுகணைகள் கடல்மட்டத்திற்கு மேலே 4000மீ உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த மாறுதல் செய்யப்படுகிறது.

4000மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதி மற்றும் உயர்பீடபூமி பகுதியில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த மாறுதல் செய்யப்படுகிறது.இதற்கு முன் அது 2000மீ ஆக மட்டுமே இருந்தது.எம்பிடிஏ நிறுவனம் மற்றும் விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் இந்த மாற்றத்தை செய்வர்.

வரும் குடியரசு தினத்திற்கு பிறகு அடுத்த தொகுதி ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளன.மொத்த 36 விமானங்களும் 2021ன் இறுதிக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.