
இந்திய கடற்படைக்காக தற்போது கட்டப்பட்டு வரும் டெஸ்ட்ராயர் ரக போர்க்கப்பல்களுக்காக தூரம் நீட்டிக்கப்பட்ட 38 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த தூரம் நீட்டிக்கப்பட்ட ஏவுகணைகள் 450கிமீ தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க கூடியவை.
இவை விசாகப்பட்டிணம் ரக டெஸ்ட்ராயர் கப்பல்களில் பொருத்தப்பட உள்ளன.
1800 கோடிகள் செலவில் இந்த ஏவுகணைகள் பெறப்பட உள்ளன.இவற்றை பெற விரைவில் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்க உள்ளது.
இந்திய கடற்படையில் உள்ள பெரும்பாலான போர்க்கப்பல்களுக்கு பிரம்மோஸ் ஏவுகணையே பிரதான தாக்கும் ஏவுகணையாக உள்ளது.