
மூன்றாவது விமானம் தாங்கிய கப்பல் கடற்படைக்கு அவசியம் செயல்பாட்டுக்கு தேவை என கடற்படை தினத்தன்று நடைபெற்ற விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்கள் கூறியிருந்தார். தற்போது இந்தியா ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கிய கப்பலை கட்டி வருகிறது.இதை தவிர இந்திய கடற்படையில் விக்ரமாதித்யா என்ற கப்பல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
கடற்படை கரை சார்ந்த ஒரு படையாக மட்டுமின்றி கடற்பரப்பில் நீண்ட தூரம் சென்று வான்சக்தியை உபயோகிக்கும் படையாக இருக்க வேண்டும்.இதற்கு விமானம் தாங்கிய கப்பல்கள் அவசியமாக உள்ளது.
வளர்ந்து வரும் அதிநவீன கடற்படைக்கு விமானம் தாங்கிய கப்பலின் தேவை மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் விமானம் தாங்கிய கப்பல் குறித்து ஒருமுறை பேசிய ஒருங்கிணைந்த படை தளபதி ராவத், விமானம் தாங்கிய கப்பலை விட நீர் மூழ்கி கப்பலின்
தேவையே கடற்படைக்கு மிகவும் தேவையாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார். விமானம் தாங்கிய கப்பல்கள் ஒரு எளிதான இலக்காக எதிரி நாட்டு கடற்படைக்கு தோன்றும் ,ஆனால் நீர் மூழ்கிகள் அப்படி அல்ல.
மேலும் கூறிய தளபதி ராவத் விமானம் தாங்கிய கப்பல்களை பெறுவதை விட அந்தமான் நிக்கோபர் தீவுகளை மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கிய கப்பலாக பயன்படுத்த முடியும் என கூறியுள்ளார். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வான் தளங்கள் அமைப்பதன் மூலம் இவற்றை சாத்தியமாக்க முடியும் என கூறியுள்ளார்.
தற்போது கூறியுள்ள கரம்பீர் சிங் அவர்கள் கடற்படைக்கு மூன்று விமானம் தாங்கிய கப்பல்கள் அவசியம் என கூறியுள்ளார். தற்போது ஒரே ஒரு விமானம் தாங்கிய கப்பல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இரண்டாவது விமானம் தாங்கிய கப்பல் கட்டுமான பணி நீண்ட காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விக்ராந்த் கப்பல் வரும் 2022ம் ஆண்டு இறுதியில் படைகளில் இணைக்கபடும் என்ற தகவல் உள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாட்டு கடற்படைகளாலும் இந்த விமானம் தாங்கிய கப்பல்களை இயங்கி விட முடியாது. ஆனால் இந்திய இதில் அளவற்ற அனுபவங்களை கொண்டது. விமானம் தாங்கிய கப்பலை இயக்குவது மற்றும் அதனை நடவடிக்கைகளில் இணைத்துச் சிறப்பாக செயல்படுத்துவது போன்ற அனுபவங்கள் இந்திய கடற்படை பெற்றுள்ளது. எனவேதான் விமானம் தாங்கிய கப்பல் தேவை என கடற்படை தளபதி கூறியுள்ளார்.
மேலும் இரண்டாவது விமானம் தாங்கிய கப்பல் கடற்படைக்கு சேர்க்கும் நேரம், முதல் விமானம் தாங்கிய கப்பலான விக்ரமாதித்யா மறு கட்டுமான பணிக்கு சென்றுவிடும். இதனால் மீண்டும் ஒரு விமானம் தாங்கிய கப்பல் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.இதனை தவிர்க்கும் விதமாக மூன்றாவது விமானம் தாங்கிய கப்பல் அவசியம் என இந்திய கடற்படை தளபதி கூறியுள்ளார்.