15 நாள் தொடர் கடுமையான போருக்குத் தேவையான ஆயுதங்களை பாதுகாப்பு படைகள் தேக்கிவைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவுடனான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அவரச ரீதியில் நிதி செலவு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதை கொண்டு பாதுகாப்பு படைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் 50000 கோடிகள் செலவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்க உள்ளன.
இதற்கு முன் பத்து நாள்கள் போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமே இராணுவம் தேக்கி வைத்திருந்திருந்தது.தற்போது சீனா மற்றும் பாக் என இருமுனை அச்சுறுத்தல்களை சமாளிக்க மேலதிக ஐந்து நாட்கள் போரிட தேவையான ஆயுதங்கள் சேமித்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது முக்கியமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கி வருகிறது இராணுவம்.
பெரிய அளவில் ஏவுகணைகள் டேங்க் மற்றும் ஆர்டில்லரி ஷெல்கள் வாங்கப்பட்டு வருகிறது.