
இந்திய இராணுவம் தற்போது 400 இழுவை ஆர்டில்லரிகளை படையில் இணைக்க தயாராக உள்ள நிலையில் அதற்கு சரியான தேர்வாக இந்திய தயாரிப்பு அடாக்ஸ் ஹொவிட்சர்கள் உள்ளன.இன்னும் சோதனை கட்டத்தில் இருந்தாலும் இந்த அடாக்ஸ் ஆர்டில்லரிகளை படையில் இணைக்க முதல் தேர்வாக உள்ளது.
அடுத்ததாக இஸ்ரேலிய தயாரிப்பு துப்பாக்கி போட்டியில் இருந்தாலும் அதை படையில் இணைக்க நீண்ட காலம் பிடிக்கும்.டிஆர்டிஓ தயாரிப்பு அடாக்ஸ் ஹொவிட்சர்கள் தற்போது மகாராஷ்டிராவில் சோதனையில் உள்ளன.ஒப்பந்தம் கையெழுத்தானால் முதல் 18 மாதத்திலேயே சுமார் 200 துப்பாக்கிகளை இராணுவத்திற்கு வழங்க டிஆர்டிஓ தயாராக உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெளியான தகவல்கள் படி இந்திய இராணுவம் இஸ்ரேலிய ஆர்டில்லரிகளை படையில் இணைக்க நினைத்தாலும் அவற்றை படையில் இணைக்க நீண்ட காலமாகும்.விலை தொடர்பாக பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் மற்றும் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான கட்டுமானங்கள் என அதிக காலம் பிடிக்கும்.
சோதனையின் போது இந்திய தயாரிப்பு அடாக்ஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது.மேலும் நீண்ட தூரமும் சுட்டுள்ளது.மேலும் ஆர்டில்லரி தயாரிப்பு கட்டுமானங்கள் முடிந்துள்ளன.ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 18-24 மாதத்திற்குள் சுமார் 200 துப்பாக்கிகளை வழங்க தயாராக இருப்பதாக டிஆர்டிஓ கூறியுள்ளது.