மூன்று நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள இந்திய ராணுவம் தளபதி அங்கு முக்கிய இராணுவ அதிகாரிகளையும் மற்றும் பாதுகாப்புதுறை அதிகாரிகளையும் சந்தித்து பேச இருக்கிறார்.
இந்திய இராணுவ தளபதி ஏற்கனவே ஆறு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமிரகம் மற்றும் சவுதி சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க அளவு ஆயுதங்களை விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இராணுவ தளபதி அவர்களின் தென்கொரிய பயணம் அமைந்துள்ளது.
தென்கொரியா சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி சியோலில் அந்நாட்டின் பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் அந்நாட்டு இராணுவ தளபதி மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ படை தளபதியையும் சந்தித்து பேச உள்ளார்.இதை தவிர தென்கொரியாவின் இராணுவ தளவாட கொள்முதல் மற்றும் திட்ட தலைமை அமைச்சர் அவர்களையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு இராணுவ உறவுகள் குறித்து பேச இருக்கிறார்.
இதை தவிர இந்திய ராணுவ தளபதி தென்கொரிய காம்பேட் பயிற்சி மையத்தையும் ,அதி நவீன பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தையும் பார்வையிடவுள்ளார். கடந்த மாதம் இந்திய ராணுவ தளபதி அவர்கள் மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன் இந்திய ராணுவ தளபதி மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஹஸ்வர்தன் ஆகியோர் மியான்மர் சென்று இரு நாட்டு உறவுகள் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்திய ராணுவ தளபதி அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.