கிறிஸ்துமசை முன்னிட்டு காஷ்மீர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய இராணுவ வீரர்

மிசன் ஸ்மைல் என்ற திட்டத்துடன் 19 வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த சிபாய் குர்விந்தர் சிங் அவர்கள் சாண்டா கிளாசாக மாறி காஷ்மீர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இனிப்புகளுன் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரீநகரில் இருந்து 65கிமீ தொலைவில் உள்ள லர்கிபோரா பகுதியில் உள்ள ராஷ்டீரிய ரைபிள்ஸ் கேம்ப் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளால் நிரம்பி வழிந்தது.பக்கத்து பகுதிகளான வெஷ்சு,பெத்டயல்கம்,ப்ரென்டி,கொகெர்னக்,வாய்லு மற்றம் கடோல் ஆகிய பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கேம்பின் கமாண்டிங் அதிகாரி அழைப்பு விடுத்தார்.

நேற்றைய தினம் பூட்ஸ் சத்தங்களுக்கு நடுவே குழந்தைகளின் சிரிப்பு சத்தங்களும் பலமாக கேட்டது.

குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடியது ஆகச்சிறந்த அனுபவமாக இருந்ததாக லெப் கலோ மன்ப்ரீத் சிங் அவர்கள் கூறியுள்ளார்.