
சௌதி சென்றுள்ள இந்திய இராணுவ தளபதியை அந்நாடு சிறப்பாக வரவேற்றுள்ளது.இந்த பயணத்தின் மூலம் இருநாடுகளின் இராணுவ உறவு மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவ தளபதி நரவேன அவர்கள் இரு கல்ப் நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.இந்திய இராணுவ தளபதி ஒருவர் சௌதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
ராயல் சௌதி தரைப் படை தலைமையகத்தில் இராணுவ அணுவகுப்புடன் இந்திய இராணுவ தளபதியை அந்நாட்டு படைகள் வரவேற்றன.இரு நாடுகளுன் உறவு குறித்து ராயல் சௌதி தரைப்படை தளபதி பகத் பின் அப்துல்லா முகமது அவர்களுடன் இராணுவ தளபதி உரையாடினார்.