
இராணுவ தளபதி நரவனே அவர்கள் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்ய உள்ளார்.இந்த விசிட்டின் போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுவது குறித்து பேச உள்ளார்.
இரு நாட்டிலும் இரு நாட்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் இராணுவ தளபதி நரவேன அவர்கள்.அங்கு மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் உரையாடுவார்.
கடந்த வருடங்களாவே இந்தியா கல்ப் நாடுகளுடன் இணைந்த போர்பயிற்சி மற்றும் உளவு பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் தனது பாதுகாப்பு உறவை வலுப்படுத்தி வருகிறது.மேலும் பிரம்மோஸ் ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மியான்மர் மற்றும் நேபாள நாடுகளுக்கு பிறகு தற்போது தளபதி மூன்றாவது முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.