
சாகர் 3 என்னும் திட்டத்தின் கீழ் தற்போது இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் கில்டன் போர்க்கப்பல் கம்போடியா சென்றுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடியா மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 15 டன் அளவிலான உதவிப் பொருள்களை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கில்டன் 29 டிசம்பர் 2020 அன்று கம்போடியாவுக்கு கொண்டுசென்றது.
இந்த உதவிப் பொருட்கள் கம்போடியா நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை கமிட்டியிடம் இந்திய கடற்படை வழங்கும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 15 டன் அளவிலான உதவிப் பொருட்களை ஏற்கனவே இந்திய கடற்படை வியட்நாமிற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.