இந்திய எங்களுக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்த பார்க்கிறது-பாக் வெளியுறவு அமைச்சர் கதறல்

  • Tamil Defense
  • December 20, 2020
  • Comments Off on இந்திய எங்களுக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்த பார்க்கிறது-பாக் வெளியுறவு அமைச்சர் கதறல்

நான்கு வருடங்களுக்கு பிறகு இன்னும் இந்தியா சர்ஜிகல் தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தோடு பாக் இருந்து வருகிறது.இதை உறுதிப் படுத்தும் விதமாக பாக் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேசி தனது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.

பாக் உளவுத்துறை மூலம் இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக அறிந்தேன்.இதற்கான இந்தியா தனது கூட்டாளியாக கருதுபவர்களிடம் அனுமதி வாங்கி வருவதாக குரேஷி கூறியுள்ளார்.

இந்த மாதம் இந்திய இராணுவ தளபதியும் யுஏஇ மற்றும் சௌதி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.