இந்தியா-பாக் கடற்படை போர் 1971- பாகம் 7

திட்டமிட்டது போலவே, 4 டிசம்பர் அன்று தாக்கும் குழு கராச்சியிலிருந்து 290 மைல் தொலைவு பகுதியை அடைந்திருந்தது.அது பாகிஸ்தான் விமானப் படையின் ரோந்து விமானங்கள் செல்லும் வான் பரப்பிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இருந்தது.1971 சமயங்களில் பாக் விமானப்படை விமானங்களில் இரவில் குண்டுவீச தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாதிருந்தது.எனவே இந்தியக் கடற்படை இரவில் கராச்சியை நெருங்கி தாக்க முடிவு செய்திருந்தது. பாகிஸ்தான் நேரப்படி இரவு 10.30, இந்தியத் தாக்கும் கப்பல் குழு காராச்சிக்கு 210 மைல் பகுதியை நெருங்கியது.கராச்சியை நெருங்கியதும் இலக்குகள் உறுதிப்படுத்தப்பட்டன.அவைகள் பெரும்பாலும் பாக் போர்க்கப்பல்கள்.

INS நிர்கத் முன்னோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து பாகிஸ்தானின் PNS கைபர் நசகாரி போர்க்கப்பல் மீது ஸ்டைக்ஸ் ஏவுகணையை ஏவியது.கைபர் இதனை இந்திய விமானப் படை தாக்குதல் என நினைத்து தனது விமான எதிர்ப்பு அமைப்புகளை செயல்படுத்தியது.நிர்கத் ஏவிய ஏவுகணை கைபர் கப்பலின் வலது பகுதியில்  மின்னனு வல்லுநர்கள் இருக்கும் தளத்தை 10:45க்கு தாக்கியது.இதனால் கைபரின் முதல் கொதிகலன் அறை வெடித்தது.இதனால் கப்பலின் உந்துவிசை அமைப்பு (propulsion) செயல்படாமல் கப்பல் நின்று போனது.கப்பல் முழுவதிலும் புகை கிளம்பி வானில் பரவியது.உடனே கைபர் தலைமையகத்திற்கு அவரச தகவல் அனுப்பியது.”எதிரி விமானம் எங்களை தாக்கியுள்ளது.கொதிகலன் சேதமடைந்து கப்பல் நின்றுபோனது”(“Enemy aircraft attacked in position 020 FF 20. No. 1 boiler hit. Ship stopped”).

கப்பல் தாக்கப்பட்டதில் பீதியடைந்த வீரர்கள் பாக் கடற்படை தலைமையகத்திற்கு கப்பலின் தற்போதைய நிலை (இருப்பு நிலை குறித்த ஒருங்கிணைந்த குறியீடு) குறித்த தகவலை தவறாக அனுப்பினர்.இதனால் பாகிஸ்தான் அனுப்பிய காப்பாற்றும் குழு கப்பலை அடைய தமதமானது.கப்பல் இன்னும் மிதப்பதை அறிந்த நிர்கத் மற்றுமொரு ஏவுகணையை கைபர் நோக்கி செலுத்தியது.அது கப்பலின் இரண்டாது கொதிகலனை வெடித்து சிதறடித்தது.இதனால் கைபர் மூழ்கியது.கப்பலில் இருந்த 222 பாக் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்தியக் கப்பல் குழு அடுத்த 11 மணிக்கு இரு இலக்குகளை அடையாளம் கண்டுகொண்டது.ஒன்று பொருள் ஏற்றிச் செல்லும் கார்கோ கப்பலான எம்வி வீனஸ் சேலஞ்சர்.அது பாக் படைகளுக்கு தேவையான படைத் தளவாடங்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.மற்றொன்று அதை காவல் காத்து சென்ற நாசகாரி போர்க்கப்பலான ஷாஜகான்.இந்த இரண்டு கப்பல்களையும் கண்டு கொண்ட நிபட் அவைகளை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியது.முதல் ஏவுகணை வீனஸ் சேலஞ்சர் கப்பலை தாக்கியது.இதில் அந்த கப்பல் மூழ்கியது.இரண்டாவது ஏவுகணை ஷாஜகானை தாக்கியது.இதில் அந்தக் கப்பல் கடும் சேதத்திற்கு உள்ளானது.அடுத்து இரவு 11.20க்கு  PNS முகாபிஸ் என்ற கண்ணிவாரிக் கப்பலை ஐஎன்எஸ் வீர் தாக்கியது.கப்பலின் இடது புறத்தை தாக்கிய ஏவுகணை ,கப்பல் தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கும் முன்னரே மூழ்கியது.அதிலிருந்த 33வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இதே நேரத்தில் ஐஎன்எஸ் நிபட் கராச்சியை நோக்கி விரைந்தது.கிட்டத்தட்ட 16மைல் தொலைவில் இருந்து கராச்சியில் இருந்த கேமாரி எண்ணெய் டேங்கை தாக்கியது.இரண்டு ஏவகணை ஏவப்பட்டதில் முதல் ஏவுகணை வழிமாறியது.ஆனால் மற்றொன்று வெற்றிகரமாக எண்ணெய் டேங்கை தாக்கியது.இதில் முழுவதுமாக அந்த டேங்க் அழிக்கப்பட்டது.இதனால் பாக் கடற்படைக்கு எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது.தாக்குதலை முடித்து இந்தியக் கப்பல்கள் பக்கத்தில் இருந்த இந்திய துறைமுக பகுதிக்கு திரும்பின.கைபரில் பிழைத்தவர்களை மீட்க பாக் கடற்படை தலைமையகம் ரோந்து கப்பல்களை அனுப்பியது.அதே போல் முகாபிஸ் தகவல் அனுப்பும் முன்னரே மூழ்கியதால் அதிலிருந்தவர்களின் விதி அவர்களுக்கு தெரிந்திருந்தது.கடலில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து சில பேர் மீட்டது ரோந்து கப்பல்.

எந்த சேதமும் இல்லாமல் இந்திய தாக்கும் கப்பல் குழு இந்தியா திரும்பியது.ஆபரேசன் ட்ரைடன்ட் முழுவெற்றி அடைந்தது.

இதற்கு பழிதீர்க்க நினைத்து பாக் விமானப் படை இந்தியாவின் ஓகா துறைமுகத்தில் குண்டு மழை பொழிந்தன.அது இந்திய ஏவுகணை கப்பல்களுக்கான எண்ணெய் கிடங்கு, வெடிகுண்டு கிடங்கு ,மற்றும் கப்பல் நிறுத்துமிடம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.இந்தியக் கடற்படை இந்த தாக்குதலை எதிர்ப்பார்த்திருந்தது.அதனால் தான் அங்கு இருந்த ஏவுகணை கப்பல்களை வேறு இடத்திற்கு அனுப்பிவைத்திருந்தது.இதற்கு பழிதீர்க்க அடுத்த மூன்றேநாளில் பைத்தான் நடவடிக்கையை கடற்படை தொடங்கியது.இதன் பிறகு பாக் தனது முப்படைகளையும் தயார்படுத்தியது.கடற்பகுதியில் பாக் விமானங்கள் தொடர்ந்து பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டன.தொடர்ந்து பல தவறான எச்சரிக்கைகளும் கடற்படை தலைமையகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தன.அவ்வாறு தான் 6டிசம்பர், பாக் தனது சொந்த கப்பலேயே ஒரு முறை தாக்கி சொந்த வீரர்களையே கொன்றது.வழக்கம் போல் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாக் விமானமான போக்கர் ரோந்து விமானம் ஓரு பாக் போர்க்கப்பலை இந்திய போர்க்கப்பல் என தவறாக கணித்து தன் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியது.இதனை காலை 06.45 மணியளவில் அந்த கப்பலை தாக்க பாக் விமானங்களை அனுப்பியது.பாக் விமானங்களும் அந்த PNS சுல்பிகர் கப்பலை தாக்க அந்த கப்பல் கடும் சேதத்திற்கு உள்ளனது.பல மாலுமிகளும் கொல்லப்பட்டனர்.

ட்ரைடன்ட் நடவடிக்கை இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான நடவடிக்கை ஆகும்.இதை கொண்டாட முடிவு செய்த கடற்படை டிசம்பர் 4ம் தேதியை கடற்படை தினமாக அறிவித்தது.இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பல்வேறு வீரர்களுக்கு வீரவிருது வழங்கப்பட்டது. குழு நடவடிக்கைக்கை அதிகாரி கேப்டன் (பின்னாளில் துணை கடற்படை தளபதி)குலாப் மோகன்லால் அவர்களுக்கு நௌசேனா விருது வழங்கப்பட்டது.நடவடிக்கையை திறம்பட திட்டமிட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்டது. தாக்குதம் குழுவை வழிநடத்தியதற்கும் சிறப்பான திட்டமிடலுக்கும் காரணமாக கமாண்டர் பப்ரு பகன் அவர்களுக்கு மகாவீர் சக்ரா வழங்கப்பட்டது.நிபட்டின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் பகதூர் நாரிமன் கவினா, நிர்கத்தின் கமாண்டிங் அதிகாரி இந்தர்ஜித் சர்மா, வீர் கப்பலின் கமாண்டிங் அதிகாரி ஓம்பிரகாஷ் மேக்தா ஆகியோருக்கு வீர் சக்ரா வழங்கப்பட்டது.நிர்கத்தின் Master Chief M. N. சங்கல் அவர்களுக்கும் வீர் சக்ரா வழங்கப்பட்டது.