
இந்தியாவுக்கு எதிராக சீனா தனது பலத்தை அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் கட்டுவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது அரசின் கவனம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி பலத்தை அதிகரிப்பதில் தான் உள்ளது.தற்போது பி75ஐ திட்டத்தின் கீழ் மேலதிக ஆறு நீர்மூழ்கிகள் கட்டுவதற்கான டென்டர் விடப்பட உள்ளது.
ஏற்கனவே மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் கட்டுவது சாத்தியமல்ல என்ற சூழ்நிலை நிலவியது.பட்ஜெட் பற்றாக்குறை பெரிய காரணமாக அதற்கு சொல்லப்பட்டது.தற்போது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலுக்கான தேவை எழுந்துள்ள நிலையில் அரசு அதை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் மாறிவிட்டன.முன்பு அமைதிக்காலமாக இருந்தது.தற்போது அவ்வாறு இல்லை என முக்கிய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.சீனப்பிரச்சனையை முன்னிட்டே இவ்வாறு கருத்து கூறியுள்ளனர் அதிகாரிகள்.
தற்போது கடற்படையில் விக்ரமாதித்யா என்ற ஒரு விமானம் தாங்கி கப்பல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.சொந்தமாக கட்டி வரும் விக்ராந்த் இன்னும் சோதனை கட்டத்திலேயே உள்ளது.