இந்தியாவிற்கு வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வழங்க பிரான்ஸ் தயார்

  • Tamil Defense
  • December 6, 2020
  • Comments Off on இந்தியாவிற்கு வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வழங்க பிரான்ஸ் தயார்

இந்திய விமானப்படையின் வானில் எரிபொருள் நிரப்பும் திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆறு ஏர்பஸ் 330 பலபணி போக்குவரத்து டேங்கர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.தற்போது இதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையிடம் தற்போது ஏழு இரஷ்ய தயாரிப்பு IL-76 M விமானங்கள் உள்ளன.சீனாவும் பாகிஸ்தானும் கூட இதே போன்ற விமானங்களை உபயோகித்து வருகிறது.

இந்தியாவோ மறுபுறம் ஆறு விமானங்களை பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற முன்பு திட்டமிட்டிருந்தது.ஆனால் தற்போது பிரான்ஸ் 5-7 வருட பழமையான ஆறு விமானங்களை 30 வருட பிளாட்பார்ம் லைஃப் உடன் குறைந்த விலையில் தர தயாராக உள்ளது.

இந்த ஏர்பஸ் 330 விமானங்கள் உதவியுடன் ஒரே நேரத்தில் இரு போர்விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும்.அதே நேரத்தில் இதில் 260 பேரும் பயணிக்க முடியும்.இதை போக்குவரத்து விமானமாகவோ அல்லது ஏர் ஆம்புலன்சாகவோ அல்லது டேங்கர் விமானமாகவோ உபயோகிக்க முடியும்.

நவீன விமானப்படைக்கு டேங்கர் விமானங்கள் என்பவை மிகவும் இன்றியமையாதவை ஆகும்.