
பிரதமர் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது 96% இந்தியத் தயாரிப்பு ஆகும்.30 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடியது.
இந்தியாவுக்காக மேம்படுத்தி உள்ள ஆகாஷ் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை விட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஏவுகணை அமைப்புகள் சிறிது மாறுபட்டு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. ஆகாஷ் வான்பாதுகாப்பு ஏவுகணையை தவிர பிரம்மோஸ் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.