“தொழிலாளி முதல் இராணுவ அதிகாரி வரை” உத்வேகமூட்டும் வீரரின் கதை
1 min read

“தொழிலாளி முதல் இராணுவ அதிகாரி வரை” உத்வேகமூட்டும் வீரரின் கதை

அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவது என்பதே ஒரு சிறந்த உணர்வு தான்.28வயதே ஆன பீகாரை சேர்ந்த இளைஞரான பல்பேங்தா திவாரி அவர்களும் இன்று அதே உணர்வில் தான் உள்ளார்.

சனியன்று இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி முடித்து இன்று இராணுவ அதிகாரியாக மிளிர்கிறார் திவாரி அவர்கள்.அவரது அம்மா ,மனைவி மற்றும் அவரது நான்கு மாத மகள் அனைவரும் பெருமையோடு அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

16 வயது முதலே தனது மகன் பணிக்கு சென்று உழைக்க தொடங்கியதாக தனது மகனை பற்றி கண்ணீரும் பெருமையோடும் கூறுகிறார் அவரது அம்மா.50ரூ சம்பளத்திற்காக 12 மணி நேரம் உழைத்துள்ளார்.

12ம் வகுப்பிற்கு பிறகு பீகாரில் இருந்து ஒடிசா சென்று அங்கு கம்பி வெட்டும் பணிக்கு சேர்ந்துள்ளார்.அடுத்து ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.இருந்தும் தனது படிப்பை தொடர்ந்துள்ளார்.இத்தனை கடினங்களுக்கும் நடுவில் இராணுவத்தில் இணைவதற்கான தனது கனவை மட்டும் அவர் தொலைத்துவிடவில்லை.

போபாலில் உள்ள இஎம்இ சென்டரில் இணைவதற்கான நுழைவு தேர்வில் இரண்டாம் முறை எழுதி 2012ல் வெற்றி பெற்றுள்ளார்.அவர் அங்கு ஐந்து வருடம் சிபாய் ஆக பணிபுரிந்துள்ளார்.அதன் பிறகு 2017ல் இராணுவ கேடட் கல்லூரியில் இணைவதற்கான நுழைவுத் தேர்வில் வென்றுள்ளார்.

தற்போது இராணுவ அதிகாரியாக தேச சேவை செய்ய உள்ளார்.

அதிசயம் நடக்கும் ஆனால் கடின முயற்சியின்று அல்ல..!