இந்தியா பிரான்ஸ் ரஃபேல் விமானங்களின் போர் பயிற்சி

  • Tamil Defense
  • December 30, 2020
  • Comments Off on இந்தியா பிரான்ஸ் ரஃபேல் விமானங்களின் போர் பயிற்சி

இந்திய சீன எல்லையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரஃபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதம் ஜோத்பூரில் போர் பயிற்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்கைரோஸ் வார்கேம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள ஜோத்பூருக்கு பிரான்ஸ் நாட்டு ரஃபேல் விமானங்கள் வருகின்றன. இந்த விமானங்களோடு இந்திய ரஃபேல் விமானங்களும் சுகாய் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளன.

இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் கலந்து கொள்ளும் முதல் போர் பயிற்சியாக இது அமைய உள்ளது.ஏற்கனவே இந்திய பிரான்ஸ் விமானப் படைகள் கருடா என்ற போர் பயிற்சி நடத்தி வருகின்றன எனினும், தற்போது ரஃபேல் போர் விமானங்களை ஈடுபடுத்தி புதிய பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியின் போது சில முக்கிய இலக்குகளை அழிப்பது குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.இந்திய விமானப்படையின் ரஃபேல் மற்றும் சுகாய் விமானங்களை இணைத்து புதிய தாக்குதலை எவ்வாறு மேற்கொள்வது குறித்த பயிற்சி நடத்தப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்திய சீன எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். லடாக்கில் மட்டும் இரு நாடுகளும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களையும் ஆயுதங்களையும் தளவாடங்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.