முதல் நீலகிரி ரக பிரைகேட் போர்க்கப்பல் லாஞ்ச் செய்ய உள்ள ஐிஆர்எஸ்இ

வரும் 14ம் தேதி முதல் நீலகிரி ரக (பி17ஏ) ஸ்டீல்த் பிரைகேட் கப்பலை லாஞ்ச் செய்ய உள்ளதாக கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கூறியுள்ளது.மொத்தமாக ஏழு கப்பல்கள் மசகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட உள்ளது.

முதல் கப்பலுக்கான கட்டுமானம் கடந்த 2017ல் தொடங்கியது.திட்டப்படி முதல் கப்பல் 2022ம் ஆண்டு கடற்படைக்கு வழங்கப்படும்.இதற்கான ஒப்பந்தம் கடந்த 2015ம் ஆண்டு கையெழுத்தானது.ஸ்டீல் கட்டிங் விழா கடந்த பிப்ரவரி 17,2017 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.முதல் கப்பல் ஆகஸ்டு 2022ல் படையில் இணைக்கப்படும்.

பி17ஏ பிரைகேட் கப்பல்கள் வழிகாட்டு ஏவுகணைகளை கொண்ட ஸ்டீல்த் பிரைகேட் கப்பல்கள் ஆகும்.149மீ நீளத்துடன் 6670டன்கள் எடையுடன் இந்த கப்பல்கள் இருக்கும்.

கப்பலில் பெரும்பாலனவை தானியங்கியாக மாற்றப்பட்டுள்ளதால் இதனை இயக்க 150 மாலுமிகளே போதுமானது ஆகும்.

கப்பலின் பாதுகாப்பிற்காக 32 பாரக் 8 வான் பாதுகாப்பு ஏவுகணைகளும், தாக்கும் சக்திக்காக எட்டு பிரம்மோஸ் ஏவுகணைகளும் பொருத்தப்படும்.ஒரு 5 inch 62-caliber Mk 45 நேவல் துப்பாக்கி,இரு AK-630M 30mm rotary cannon CIWS, இரு RBU-6000 நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்புகள் மற்றும் இரு ட்ரிபிள் டோர்பிடோ லாஞ்சர்கள் இருக்கும்.