
அர்ஜீன் மார்க் 1 ALFA டேங்கின் இறுதி கட்ட சோதனைகள் திங்கள் அன்று ஜெய்சால்மீரில் உள்ள பொக்ரான் சோதனை தளத்தில் நடத்தப்பட்டுள்ளது.இந்த டேங்கை டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.இது எதிர்காலத்தில் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும்.
இதற்கு முன்பு இருந்த ரகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு இந்த புதிய ரகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.சோதனையின் போது இராணுவத்தின் துணை தளபதி லெப் ஜென் ஹசப்னிஸ் மற்றும் லெப் ஜென் காலோ மற்றும் மற்ற உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
தற்போது இரு யுனிட் அர்ஜின் டேங்குகள் படையில் உள்ளன.தற்போது இறுதி கட்ட சோதனைகள் முடிந்துள்ளமையால் விரைவில் அர்ஜின் டேங்க் படையில் இணைக்கப்பட உள்ளது.எதிர்காலத்தில் இரு ரெஜிமென்டுகள் மார்க் 2 ரகமும் படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மார்க் 2 ரகத்தில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவ முடியும்.
மார்க்1-ஏ ரகத்தில் கன்னர் பார்க்கும் கருவி தானியங்கி இலக்கு கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மிக எளிதாக இலக்கை கண்காணித்து தாக்க முடியும்.